Quantcast
Channel: கலையகம்
Viewing all 556 articles
Browse latest View live

"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்

$
0
0
(பகுதி - ஒன்று)

"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்"என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.)  அதில் பல வரலாற்றுத் தவறுகள், தகவல் பிழைகள் உள்ளன. பல இடங்களில், யூதர்கள் பற்றி (வேண்டுமென்றே) தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. முகில் அதனை ஒரு கற்பனை கலந்த நாவலாக எழுதி இருக்கலாம்.

சுவாரஸ்யமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, வரலாற்றை திரிபு படுத்தி இருக்கிறார். அதில் கூறப் பட்டுள்ளது யூதர்களின் "வரலாறு"அல்ல. அதை ஓர் ஆய்வு நூலாக அல்லது வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எழுத்தாளரின் கற்பனை, நூல் முழுவதும் இழையோடுகின்றது. வேண்டுமானால், வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப் பட்ட நாவலாக நினைத்து வாசிக்கலாம். 

நூலாசிரியர் விவிலிய நூலை உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளார். முதல் ஆறு அத்தியாயங்களிலும் விவிலிய கதைகளை எழுதியுள்ளார். முதலில், பைபிளை யூதர்களின் உண்மையான வரலாறாக எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நூலாசிரியர் யூதர்களை தனி இனமாக காட்ட விரும்புவது தெரிகின்றது. யூதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட இனக்குழுவினர் என்பது ஒரு கற்பனையான வாதம். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்திற்கு செல்ல விரும்பவில்லை. யூதர்கள் மத்தியிலும் பலதரப் பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

நூலின் முதலாவது அத்தியாயம், இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்த கதையுடன் தொடங்குகிறது. ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு, அது அடிப்படைக் காரணமாக இருந்தது உண்மை தான். ஆயினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் யூத வெறுப்புக்கு அதை விடப் பல காரணங்கள் உள்ளன. 

உண்மையில், "யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தானா?'என்பதே கேள்விக்குறி. பல நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட விவிலிய நூலில், பல கதைகள் இடைச் செருகலாக புகுத்தப் பட்டன. யூதாஸ் எழுதிய சுவிசேஷம் அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப் பட்டது. அந்தப் பகுதி விவிலிய நூலில் வேண்டுமென்றே அகற்றப் பட்டது. மேற்கத்திய கிறிஸ்தவ சபைகளின் யூத எதிர்ப்பு அரசியல், பல நூறாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மத- அரசியல் கொள்கை ஆகும்.

யூதாஸ் மட்டுமல்ல, இயேசுவும் அவரது சீடர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். இயேசு கூட, யூத மதத்தை சீர்திருத்த விரும்பினாரே அன்றி, தனியான மதம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்திருக்கவில்லை. இயேசுவை பின்பற்றிய யூதர்கள், அன்றைய பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பிற யூதர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்திப் பார்த்தனர். அதற்கு ஓர் அரசியல்- சமூகக் காரணி இருந்தது. அது இந்த நூலில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிலநேரம், நூலாசிரியருக்கே அந்த விடயம் தெரியாமல் இருக்கலாம்.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் காலத்தில், ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பிரதேசம், ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டது. உண்மையில் ஆட்சியாளர்கள் தம்மை "ரோமர்கள்"என்று அழைத்துக் கொண்டாலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். அதனால், பாலஸ்தீனத்திலும் கிரேக்க மொழி ஆட்சி மொழியாக இருந்தது.

ரோமர்களின் அரச அலுவலகர்களாக வேலை செய்ய விரும்புவோர், கிரேக்க மொழியை சரளமாக எழுதப், பேசத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கிரேக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்த உள்ளூர் மேட்டுக்குடி வர்க்கம் ஒன்றிருந்தது. யூதர்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

ரோமர்களின் கீழ் அரசுப் பதவிகளில் இருந்த யூதர்களை "ஹெலனிக் யூதர்கள்"என்று அழைக்கலாம். அதாவது, அவர்கள் தமது தாய்மொழியான ஹீபுருவை விட, அந்நிய மொழியான கிரேக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பல யூதர்கள் வீட்டிலும் கிரேக்க மொழி பேசினார்கள். நமது நாடுகளில் உள்ள ஆங்கிலம் பேசும் தமிழ் மேட்டுக்குடியினருடன் அவர்களை ஒப்பிடலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம், யூதர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட மக்களாக இருக்கவில்லை.

ஹீபுரு யூதர்களுக்கும், ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடுகள் கொதி நிலையில் இருந்தன. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல. பொருளாதாரப் பின்னணியும் முக்கிய பங்காற்றியது. ஹெலனிக் யூதர்கள் வசதியான பிரிவினராக இருக்கையில், ஹீபுரு யூதர்கள் ஏழ்மையில் வாழ்ந்தனர். அதற்கான காரணம் மிகத் தெளிவானது. ரோம அரசுடன் ஒத்துழைத்த யூதர்கள் பதவிகளை பெற்று வளமாக வாழ்ந்திருப்பார்கள்.

அன்றைய யூதர்கள் எல்லோரும் ஹீபுரு பேசினார்கள் என்றும் சொல்ல முடியாது. ஹீபுரு, அரபி மொழிகளுக்கு நெருக்கமான அரமைக் மொழி பேசிய யூதர்களும் இருந்தனர். உதாரணத்திற்கு இயேசு அரமைக் மொழி தான் பேசினார். ரோமர்கள் காலத்தில் அரமைக் மொழி முக்கியத்துவம் இழந்து விட்ட போதிலும், அது ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் பரவலாக பேசப் பட்ட வணிக மொழியாக இருந்தது.

அன்றைய பாலஸ்தீன அரசியல் நிலவரம், பிற்காலத்தில் கிறிஸ்தவம் என்ற தனியான மதம் உருவாக காரணமாக இருந்தது. உண்மையில், முதன் முதலாக கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள் என்பது தற்செயல் அல்ல. (விவிலிய நூலின் புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது. "கிறிஸ்து"கூட ஒரு கிரேக்கச் சொல் தான்.) பின்தங்கிய பிரிவினரான ஹீபுரு யூதர்களுக்கும், முன்னேறிய பிரிவினரான ஹெலனிக் யூதர்களுக்கும் இடையிலான சமூக முரண்பாடு, பிற்காலத்தில் யூத - கிறிஸ்தவ மத முரண்பாடாக பரிணமித்தது.

ஏற்கனவே, கிரேக்க மொழி சரளமாகப் பேசத் தெரிந்த யூதர்கள், கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், பிற யூதர்களிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அது தான் யூத வெறுப்புக்கு காரணமே தவிர, யூதாஸின் காட்டிக்கொடுப்பு அல்ல. ஹெலனிக் யூதர்கள், ஹீபுரு யூதர்களை தம்மை விடக் கீழானவர்களாக பார்த்தார்கள். நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத பழைமைவாதிகள் என்றார்கள். மறு பக்கத்தில், ஹீபுரு யூதர்கள், ஹெலனிக் யூதர்களை, எதிரிகளுடன் ஒத்துழைக்கும் இனத் துரோகிகளாக கருதினார்கள். "மத நம்பிக்கையற்றவர்கள், போலி யூதர்கள், கிரேக்க கைக்கூலிகள்"என்றெல்லாம் தூற்றினார்கள்.

ரோம அரச அதிகாரத்திற்கு எதிராக, ஆங்காங்கே ஹீபுரு யூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்.  யூதர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ரோமப் படைகள் அனுப்பப் பட்டன. இராணுவ நடவடிக்கைகளுக்கு ஹெலனிக் யூதர்களும் உதவினார்கள். சகோதர இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை காட்டிக் கொடுத்தார்கள், அல்லது போரிட்டுக் கொன்றார்கள். அதே நேரம், யூதக் கிளர்ச்சியாளர்கள், "துரோகிகள் அழிப்பு"என்ற பெயரில் ஹெலனிக் யூதர்களை கொன்றார்கள். அதாவது, "யூதர்களுக்கு எதிராக யூதர்கள்"! ஆகவே, யூதர்கள் எல்லோரும், தொன்று தொட்டு ஒரே சிந்தனை கொண்ட, ஒற்றுமை மிக்க இனமாக வாழ்ந்தனர் என்பது ஒரு கற்பனை.

நூலில் இருந்து: 
//கி.பி. 115 ல் ஈராக், லிபியா, எகிப்து, சைப்ரஸ் ஆகிய இடங்களில் திடீரென யூதர்கள் கலகங்களில் ஈடுபட்டனர். ஆனால், பாலஸ்தீன யூதர்கள் அமைதியாகத் தான் இருந்தார்கள். ரோமானியர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.... இந்தப் புரட்சிகளின் நோக்கம் ஒன்று தான். ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு. அதற்காக நிகழ்ந்த புரட்சிகளை வழிநடாத்த சரியான தலைமை கிடைக்கவில்லை.....//

குறிப்பாக எகிப்தில் அலெக்சாண்ட்ரியா நகரில் யூதர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். உண்மையில், அந்தக் கலவரத்திற்கு காரணம், "ஜெருசலேமை தலைநகரமாகக் கொண்ட ஒரு யூதப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற யூதர்களின் கனவு"அல்ல! அது வெறும் கட்டுக்கதை. உண்மையான காரணம், நமது காலத்தில் நடப்பதைப் போன்ற, இன/மத முரண்பாடுகளால் வெடிக்கும் இன/மதக் கலவரங்கள்.

இனக் கலவரத்தை தூண்டுவதற்கு சிறு நெருப்புப்பொறி போதுமாக இருந்தது. எங்காவது ஒரு கிரேக்க- கிறிஸ்தவரை, யூதர்கள் கொலை செய்திருந்தால், அதை சாட்டாக வைத்து கலவரம் வெடித்தது. கிரேக்க காடையர்கள், யூதர்களின் வீடுகளை எரித்தனர். கண்ணில் கண்ட யூதர்களை படுகொலை செய்தனர், அல்லது பாலியல் பலாத்காரம் செய்தனர். யூதர்களும் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், எதிர்த் தாக்குதல்கள் நடத்தினார்கள். இப்படியான இனக் கலவரங்கள், ரோம சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளன.

உண்மையில், பண்டைய கால ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு மதம் முக்கியமாகப் படவில்லை. தலைநகர் ரோமாபுரியில் ஈரானிய, எகிப்திய தெய்வங்களுக்கும் ஆலயங்கள் இருந்தன. யூதர்களின் ஆலயமும் (சினகொக்) இருந்தது. ரோமர்கள் சாம்ராஜ்ய நன்மை கருதி, அனைத்து மதங்களையும், இனங்களையும் உள்வாங்கிக் கொண்டனர். 

ஆயினும், பாலஸ்தீன யூதர்கள், சிலை வணக்கத்தை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையில் பற்றுள்ளவர்களாக இருந்த படியால், அவர்கள் தம்மை தனித்துவமானவர்களாக கருதிக் கொண்டனர். இது சிலநேரம் ரோம அதிகாரிகளுடன் மோதல் நிலையை தோற்றுவித்தது. அதனால் அரசுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி நடந்ததும், யூத ஆலயங்கள் இடிக்கப் பட்டதும் உண்மை தான். உண்மையில் அது மத நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. ரோம தெய்வங்களை வழிபட்ட யூதர்களும், மதச் சார்பற்ற யூதர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், மேற்படி மோதல்களால் ஏற்பட்ட முக்கியமான விளைவை நூல் பதிவு செய்யவில்லை. அதாவது, பாலஸ்தீன யூதர்களின் கிளர்ச்சி அடக்கப் பட்டதும், அங்கு வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிலநேரம், ரோமர்கள் அவர்களை பலவந்தமாக வெளியேற்றி, சாம்ராஜ்யத்தின் பிற பாகங்களில் குடியேற்றினார்கள்.

அதே நேரம், உள்நாட்டுப் போர்களால் பின்தங்கி இருந்த பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி, பொருளாதார நலன்களுக்காக இத்தாலியில் குடியேறிய யூதர்களும் உண்டு. இதனை நாங்கள் பிரிட்டிஷ் காலனியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு காலத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்த இந்தியர்களும், இலங்கையரும், பிரிட்டனிலும், பிற ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் குடியேறியுள்ளதை உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்லலாம். 

ரோமர்களின் காலகட்டம் முழுவதும், யூதர்களின் பிரச்சினையானது, ஒரு சிறுபான்மையினத்தவரின் அரசியல் - சமூகப் பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் தமது பலம் எது, பலவீனம் எதுவென உணர்ந்திருந்தனர். உருவ வழிபாட்டை எதிர்க்கும், ஓரிறைக் கொள்கையை தமது பலமாகக் கருதினார்கள். அதே நேரம், அடிக்கடி பாதிக்கப்படும் சிறுபான்மை இனமாக இருப்பதை பலவீனமாகக் கருதினார்கள். அடுத்து வந்த ஆயிரம் வருடங்களுக்கும் அந்த நிலைமை தொடர்ந்திருந்தது. ஆனால், "கிறிஸ்தவ மதப் பரவலை தடுப்பதற்காக, யூதர்கள் அல்லும் பகலும் யோசித்தார்கள்"என்பது ஒரு கற்பனை.

யூதர்களை தனியான இனமாகக் கருதுவது அறியாமை. எத்தியோப்பிய கருப்பின யூதர்களுக்கும், ஐரோப்பிய வெள்ளையின யூதர்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் கிடையாது. ஒரு காலத்தில், யூத மதம் மத்திய கிழக்கில் இருந்து உலகம் முழுவதும் பரப்பப் பட்டு வந்தது.

பாலஸ்தீனத்தில் மட்டுமல்லாது, அரேபியாவில் (நஜ்ரான்; http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_13.html), ரஷ்யாவில் (கஸாரியா; http://kalaiy.blogspot.nl/2008/11/blog-post_28.html) கூட யூத ராஜ்ஜியங்கள் இருந்தன. அங்கிருந்தெல்லாம் மதம் பரப்பப் பட்டது. நஜ்ரான் யூதர்கள், இனத்தால் யேமன்- அரேபியர்கள். கஸாரியா யூதர்கள், இனத்தால் துருக்கியர்கள். இவ்வாறு, பிற இனத்தவர்களும் யூதர்களாக மதம் மாறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  

ஆயினும், ரோமர்கள் காலத்தில், யூதர்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. அதனால், மதம் பரப்பும் கொள்கை எப்போதோ கைவிடப் பட்டு விட்டது. அதே காலகட்டத்தில், கிறிஸ்தவ மதம் பரவியது. கிறிஸ்தவம் யூத மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கிரேக்க வழிபாட்டு முறைகளை பின்பற்றி தனியான மதமாக உருவாகியது. கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவியதும், மன்னரை பின்பற்றி குடி மக்களும் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

யூதர்கள் இயேசுவை தமது "மெசியாவாக"ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக கிறிஸ்தவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தம்மை ஆண்ட ரோம சாம்ராஜ்யவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், யூதர்களால் என்ன செய்திருக்க முடியும்? 

பிற்காலத்தில் யூதர்கள் போன்று, ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய கிறிஸ்தவ மதத்தினர், யூதர்களை எதிரிகளாக கருதினார்கள். அதுவும், கிறிஸ்தவத்திற்கு மாறிய, கிரேக்க- ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவு தான். ஆதி கால கிறிஸ்தவ மதம், கிட்டத்தட்ட யூத மதம் போன்றே காணப் பட்டது. இன்றைக்கும், எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்கள்.

உண்மையில், உலகில் மதம் என்ற தோற்றப்பாடு, ஓரிறைக் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட பின்னரே ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொள்ள Karen Armstrongஎழுதிய நூல்களை வாசிக்கவும்.) மதம் ஒரு நிறுவனமாக உருவாகாத பலதெய்வ வழிபாட்டுக் காலத்தில், ஓரிறைக் கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வந்த யூதர்கள், ஒரு பக்கம் கிறிஸ்தவமும், மறு பக்கம் இஸ்லாமும் தமக்குப் போட்டியாக வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், நூலாசிரியர் தனது கற்பனைக் குதிரையை தட்டி விடுகிறார்:
 //கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ யூதர்களை வெறுக்கக் காரணம் என்ன? காரணம் யூதர்களின் தலைக்கு மேலிருந்ததாக அவர்கள் நம்பிய மாய ஒளிவட்டம் தான். தாங்கள் தான் உயர்ந்தவர்கள். கடவுளால் பிரத்தியேகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. கடவுள் தம்மை எந்த நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசாத்திய நம்பிக்கை. பொருளாதாரம், கல்வி வளர்ச்சி, புத்திசாலித்தனம் இப்படி எல்லாவற்றிலும் தேர்ந்தவர்களாக இருந்தாலும், உலகில் தங்களின் கலாச்சாரம் மட்டுமே மிக உயர்ந்தது என்ற மனப்பான்மை அவர்களுக்கு எப்போதும் உண்டு. இன்று வரையிலும் கூட. அதனால் தனியாகவே வாழ்ந்தார்கள். தங்களைத் தனியாக அடையாள படுத்திக் கொண்டார்கள்.//

கிறிஸ்தவ ராஜ்ஜியங்களில் யூதர்கள் ஒடுக்கப் பட்ட மாதிரி, இஸ்லாமிய ராஜ்ஜியங்களில் ஒடுக்கப் படவில்லை, வெறுக்கப் படவுமில்லை. இஸ்லாம் தோன்றும் பொழுதே, யூதர்களும், கிறிஸ்தவர்களும் "ஒரே புத்தகத்தின் மக்கள்"என்று வரையறுக்கப் பட்டது. அதனால், கிறிஸ்தவர்கள் மாதிரியே யூதர்களும் நடத்தப் பட்டனர். இரண்டாந்தரப் பிரஜைகளாக இருந்தாலும், வரி கட்டி விட்டு சுதந்திரமாக வாழ முடிந்தது. கிறிஸ்தவர்கள் போலல்லாது, இஸ்லாமியர்கள் யூதர்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. யூதர்களும் "தலைக்கனம் பிடித்தவர்களாக"இருக்கவில்லை. ஒரு சிறுபான்மை இனமாக, தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் மட்டும் குறியாக இருந்தனர்.

மத்திய கால, கிறிஸ்தவ ஐரோப்பாவில், யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தோன்றுவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதம், கடனுக்கு வட்டி அறவிடுவதை தடை செய்திருந்தது. அதனால், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்கவில்லை. அந்தத் தொழிலை யூதர்கள் கைப்பற்றிக் கொண்டனர். சாதி அமைப்பு மாதிரி, குலத் தொழில்களை மட்டுமே செய்யும் சமூகங்களை கொண்ட, மத்திய கால ஐரோப்பாவில் யூதர்களுக்கு செய்வதற்கு வேறு தொழில் எதுவும் இருக்கவில்லை. அதே நேரம், பல இடங்களில் யூதர்கள் நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் தடை இருந்தது. 

ஆகவே, யூதர்களுக்கு இருந்த மிகக் குறைந்த தெரிவுகளில் ஒன்று தான் வட்டிக்கு கடன் கொடுப்பது. கடன் வாங்கி பாதிக்கப் பட்ட கிறிஸ்தவ மக்கள் மத்தியில், யூத வட்டிக் கடைக்காரருக்கு எதிரான வெறுப்புணர்வு இருந்தது. கத்தோலிக்க தலைமைப் பீடம், அந்த வெறுப்பை தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தது. போப்பாண்டவர் முதலாவது சிலுவைப் போரை அறிவித்ததும், ஜெர்மன் பகுதிகளில் ஆயிரக் கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப் பட்டனர். வத்திக்கான் அதைத் தடுக்கவில்லை.

மத்திய கால ஐரோப்பாவை பொறுத்தவரையில், யூதர்கள், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று கூறலாம். ஒரு காலத்தில் ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. (நூலாசிரியர் இந்த உண்மையை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.) ஆனால், அவற்றை கிறிஸ்தவ மன்னர்கள் கைப்பற்றியதும், அங்கு வாழ்ந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப் பட்ட யூதர்கள், மொரோக்கோவிலும், துருக்கியிலும் பெருமளவில் சென்று குடியேறினார்கள்.

நூலில் இருந்து:
//சிலுவைப்போர்கள் முடிவுக்கு வந்துவிடும் என்றிருந்த சமயத்திலேயே (கி.பி. 1210), யூத நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று பாலஸ்தீனுக்கு சென்று, அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவ முடியுமா, அதற்கான சாத்தியங்கள் எவ்வளவு உள்ளன, தாங்கள் இழந்த நிலங்களை மீட்டெடுக்க முடியுமா என்று ஆராய்ச்சிகள் நடத்தி வந்திருந்தது.... அந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு, துருக்கி சுல்தான் பயஸித்திடம் பேசச் சென்றனர். "பாலஸ்தீனத்தில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தங்கள் தயை வேண்டும்." //

இது பெரும்பாலும் இட்டுக்கட்டிய கற்பனைக் கதை. இதில் பல வரலாற்றுத் தகவல் பிழைகள் உள்ளன. துருக்கி ஓட்டோமான்கள் தலைமையிலான இஸ்லாமிய சாம்ராஜ்யம், 1517 ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருவானது. முதலாவது துருக்கி சுல்தானின் பெயர் (முதலாம்) செலிம். தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த செலிம், 1517 ம் ஆண்டு தான் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார். அதற்கு முன்னர், அரேபியர்கள் தான் சிலுவைப் போரில் ஈடுபட்டு, பாலஸ்தீனத்தை மீட்டெடுத்தனர்.

1291 ம் ஆண்டு சிலுவைப்போர் முடிவுக்கு வந்தது. போரில் வெற்றி வாகை சூடிய தளபதியின் பெயர் சலாவுதீன். பிறப்பால் அவர் குர்து இனத்தவர். அதனால், மம்மலேக்குகள்"என்ற பெயரில், துருக்கி மொழிபேசும் வீரர்களைக் கொண்ட படையணி உருவாகக் காரணமாக இருந்தார். மம்மேலுக் படைவீரர்கள், பிற்காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, துருக்கியில் ஒரு சிறிய நாட்டை ஆண்டார்கள். அது நடந்தது 1250 ம் ஆண்டு! 

அப்படியானால், எப்படி கி.பி. 1210ல் துருக்கி சுல்தான் ஆண்டதாக நூலாசிரியர் கதை விடுகிறார்? யூதர்கள் ஆயிரமாண்டு காலமாக, ஜெருசலேம் திரும்பக் காத்துக் கிடந்ததாக, தேசியவாத- யூதர்கள் வரலாற்றை திரித்து எழுதியுள்ளனர். தமது இஸ்ரேலிய தாயகக் கோட்பாட்டுக்கு, வலுச் சேர்ப்பதற்காக இது போன்ற வாதங்களை கூறி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த யூதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கேயும் புலம்பெயர்ந்து சென்று திரும்பி வரவில்லை. ஆனால், "ஜெருசலேமுக்கு திரும்பிச் செல்லுதல்"என்ற கொள்கை, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தான், ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள்.

அதற்கு முன்னர், மொரோக்கோ, துருக்கியில் வாழ்ந்த யூதர்கள், ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடி மக்களாக இருந்தனர். அதாவது, பாலஸ்தீனம், துருக்கி, மொரோக்கோ எல்லாம் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. ஒரே நாடு என்பதால், யூதர்கள் விரும்பிய படி ஒவ்வொரு வருடமும் ஜெருசலேமுக்கு யாத்திரை சென்று வர முடிந்திருக்கும். நிலைமை அப்படி இருக்கையில், அவர்கள் ஜெருசலேமில் தான் குடியேற வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லையே?



உசாத்துணை: 
Rome and Jerusalem, The Clash of Ancient Civilizations, Martin Goodman
A History of Christianity, Diarmaid MacCulloch
The Jewish War, Flavius Josephus 
Vreemd Volk, Integratie en discriminatie in de Griekse en Romeinse wereld, Fik Meijer

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

$
0
0
யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக"முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்"கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக"பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக"கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்."ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்."சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு"என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்"என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை"தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?"என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTVஇல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..."நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்."என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்."என்று "அன்பான"உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTVஅரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTVசொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

கோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்

$
0
0

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அபிமான புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப் பட்டதும், தமிழ்நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுக்கடை ஒழிப்புப் பாடலைப் பாடியதாலேயே கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதனால், அந்தப் பாடல் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. 

யாருக்குமே தெரியாமல் இருந்த கோவன் என்ற பாடகரை, நாடறிய வைத்த பெருமை, ஆளும் ஜெயலிதாவின் ஆதிமுக அரசைச் சேரும். முதல்வர் ஜெயலிதாவை நையாண்டி செய்து பாட்டுப் பாடியதால் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், கோவனின் கைதுக்கு வெளியில் சொல்லப் படாத சில காரணங்களும் இருக்கலாம்.

கோவனின் கைது தொடர்பாக தந்தி டிவியில் ஒரு விவாத அரங்கு இடம்பெற்றது. அந்த விவாதம், மீன் சந்தை ஆரவாரம் போன்று காட்சியளித்தது. ஆதிமுக சார்பில் கலந்து கொண்ட சரஸ்வதி, தனது கருத்துக்களை மட்டுமே எல்லோரும் கேட்க வேண்டுமென்பது போல, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டிய ரங்கராஜ் பாண்டே, இடையூறுகளை கட்டுப்படுத்தாமல், தானும் அதே தவறைச் செய்து கொண்டிருந்தார்.


விவாதத்தில் கலந்து கொண்டவர்களுடன், இந்திய அரசியல் சாசன விதிகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே, CPML (Peoples Liberation) சார்பில் கலந்து கொண்ட சதீஷிடம் மட்டும் சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ரஷ்யாவில் அப்படி, சீனாவில் இப்படி என்று தனது "மேதாவிலாசத்தை"காட்டினார். ஓர் இந்தியரான சதீஷுக்கும், ரஷ்யா அல்லது சீனாவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய அரசியல் சட்டங்களை கூட கரைத்துக் குடித்திருக்கும் அறிவுஜீவிகள், கம்யூனிசம் என்று வந்து விட்டால் மட்டும் படிக்காத பாமரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். கம்யூன் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து தான், கம்யூனிசம் வந்தது என்பதும், உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் நடந்தது என்பதும், இந்தப் படித்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ரஷ்யா, சீனாவில் மட்டும் தான் கம்யூனிசம் தோன்றியது என்று, இவர்கள் எங்கே படித்தார்கள் என்று தெரியவில்லை. கிரேக்க, ஜேர்மனிய தத்துவங்களின் தொடர்ச்சியாகத் தான் மார்க்சியம் தோன்றியது என்பதையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூட, தமது கம்யூனிச சித்தாந்தத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக, ஆதி கால தமிழ் சமுதாயத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், ஜனநாயகம் பற்றிய இவர்களது புரட்டும். எதிர்க் கட்சி என்பது, எதிர்த்துப் பேசும் கட்சி அல்ல. அரசுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி என்பதை மறந்து விட்டு, ரங்கராஜ் பாண்டே இந்திய ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார். உண்மையான எதிர்க் கட்சிகளுக்கு (அவை தேர்தலில் போட்டியிடாதவையாக இருந்தாலும்) கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுகின்றது என்பதைத் தான், கோவனின் கைது எடுத்துக் காட்டுகிறது.

டாஸ்மார்க் எதிர்ப்புப் பாடல் மட்டும் கைதுக்கு காரணம் அல்ல. வினவு தளம் நடத்தும் கண்ணையன் ராமதாஸ் மீதும், தேசத் துரோக குற்றப்பத்திரிகை எழுதப் பட்டுள்ளது என்ற உண்மையை, அந்த நிகழ்ச்சியிலேயே ரங்கராஜ் பாண்டே அடிக்கடி சுட்டிக் காட்டினார். ஆட்சியாளர்களை கேலி செய்வது தவறு என்றால், அது என்ன வகை ஜனநாயகம்? அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்லவா?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ரங்கராஜ் பாண்டே, சதீஷ் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அதற்கு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்"என்ற சொற்பதத்தை எடுத்துக் காட்டுவது நகைப்புக்குரியது. தற்போது உலக நாடுகள் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளிய வர்க்க சர்வாதிகாரம் முறியடிக்கப் பட்டு, அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்பது ஒரு தத்துவார்த்த வாதம். அதை ஒரு தத்துவமாகப் பார்க்காமல், "சர்வாதிகாரம்"என்ற ஒரு சொல்லை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

இந்த இலட்சணத்தில் தான், இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை. தொலைக்காட்சிக் கமேராக்களை அங்கே திருப்புங்கள்.

"தோழர் கோவனின் கைதுக்கு உண்மையான காரணம், அவர் பாடிய டாஸ்மார்க் பற்றிய பாடல் அல்ல. அதை மக்களிடையே கொண்டு சென்று பரப்பிய வினவு இணையத் தளம். இந்தத் தேசத் துரோக வழக்கின் முதல் குற்றவாளி, வினவு இணையத்தள நிர்வாகி கண்ணையன் ராமதாஸ்."

இந்த உண்மையை தந்தி டிவி இல் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, அழுத்தம் திருத்தமாக கூறினார். விவாதத்தில் கலந்து கொண்டு, கோவனின் கைதுக்கு ஆதரவாக பேசிய, ஆதிமுக பிரமுகர் சரஸ்வதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோரும், சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் பரவியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.

"நானும் பேஸ்புக் பார்க்கிறேன். இண்டைக்கு எத்தனை பேரிடம் மொபைல் போன், வாட்ஸ் ஆப் இருக்கு. இந்தப் பாடல் எத்தனை பேரிடம் பரவி இருக்கும்?"என்று சரஸ்வதி பொரிந்து தள்ளினார். அதை ஆமோதிப்பது போல முருகனும் "பேஸ்புக்கில் அரசை விமர்சித்து எழுதுவது தேசத்துரோகம்... இப்படியே விட்டால் கழைக் கூத்தாடியும் பேஸ்புக்கில் அரசியல் செய்யத் தொடங்கி விடுவான்."என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.

இவர்களின் கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகும். அண்மைக் கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரம் அதையிட்டு அஞ்சி நடுங்குகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிய மாய்மாலம் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. குரலற்ற அடித்தட்டு மக்களும் கருத்துச் சுதந்திர உரிமையை பாவிப்பது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தானது.

எனக்கும் கூட, கோவன் யார் என்பது கைதுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அவர் பாடிய பாடல்களை கடந்த பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். மகஇக இயக்கத்தின் அரசியல் பிரச்சாரப் பாடல்களை பாடும், கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், அனைவரையும் கவரும் வல்லமை பெற்றிருந்தார். ஆந்திராவில் புரட்சிகர தெலுங்குப் பாடல்களை பாடும் கத்தாரின் பாணியை, தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கோவன் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாக (ஆடியோ கேசட்) விற்பனை செய்யப் பட்டன. சென்னை கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனையான கேசட்டுக்களை, வெளிநாடுகளில் இருந்து கொண்டு தருவித்து, கேட்டு மகிழ்ந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம், கோவன் பாடத் தொடங்கி, அவை கேசட்டுக்களாக விற்பனை செய்யப் பட்ட காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது! அப்போதும் ஜெயலலிதா ஆட்சியை கிண்டலடித்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியுமளவிற்கு நடந்த, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை நையாண்டி செய்யும் பாடலை, அன்றைய அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் கேட்கவில்லையா? "அசைந்து வருகிறது நகைக்கடை... தங்கம் வேணுமா... சொல்கிற இடத்தில வெட்டனும்..."என்றெல்லாம் பாடினார்கள். அதுவும், ஜெயலிதா ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்!

புரட்சிகர பாடகர், தோழர் கோவனை அப்போது கைது செய்யாமல், இப்போது கைது செய்யக் காரணம் என்ன? அதைத் தான் தந்தி டிவி விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி விட்ட, இணையப் பாவனை, சமூக வலைத் தளங்கள், ஸ்மார்ட் போன்கள் தான் காரணம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, இப்படி ஒரு சமூக மாற்றம் வரும் என்று ஆட்சியாளர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வசதி படைத்த மத்தியதர வர்க்கம் மட்டுமே இணையம் பாவித்த காலம் மலையேறி விட்டது. இன்று காய்கறிக் கடைக்காரன், கிரமாப்புற விவசாயி எல்லாம், இணையப் பாவனை கொண்ட ஸ்மார்ட் போன் பாவிக்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

சமூகவலைத்தளங்களிலும், ஒரு சில மத்தியதர வர்க்க இளைஞர்கள் மட்டும் கூடியிருந்து, அமெரிக்க சுகபோக வாழ்க்கை பற்றி அரட்டை அடித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், கடந்த ஏழாண்டு காலத்தில், வினவு போன்ற கம்யூனிசக் கொள்கைகளை பரப்புவோரும், சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வலைப்பூவாக தொடங்கிய வினவு, குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த இணையத் தளமாக மாறியது.

"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்..."என்று, அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிக்கும் சரஸ்வதியும், முருகனும் கூறுகின்றனர். பணபலம் படைத்த பெரிய கட்சிகள் மட்டுமே, மேடை போட்டுப் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) தமிழகத்தில் இயங்கி வருகிறது. அறுபதுகளில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சி என்பதும், ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தி போராடும் இயக்கம் என்பதும் அரசுக்கு நன்றாகத் தெரியும். சென்னை கீழைக்காற்று புத்தகக் கடைக்கு வரும், கியூ பிராஞ்ச் புலனாய்வு அதிகாரிகள், "ஒன்றும் தெரியாத மாதிரி"நூல்களை வாங்கிச் செல்வார்கள்.

சென்னை மாநகர மின்சார ரயிலில், பஸ் வண்டிகளில், மகஇக தோழர்கள் ஏறி, தமது வெளியீடுகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளை, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

அப்போதெல்லாம், மகஇக பிரச்சாரம் செய்யும் கருத்துக்கள், மிக மிகக் குறைந்தளவு மக்களிடம் மட்டுமே போய்ச் சேர்ந்தது. இப்போதும் அப்படியா? உலகமயமாக்கலின் விளைவுகளில் ஒன்றாக, இணையப் பாவனையும், ஸ்மார்ட் போன்களும் எல்லோரும் வாங்கிப் பாவிக்குமளவிற்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்க மக்கள் கூட, மிக விரைவாக நவீன தொலைத்தொடர்பு வசதிகளை தமதாக்கிக் கொண்டனர். உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்து உருவான படித்த வாலிபர்கள், மிக இலகுவாக வினவு பிரச்சாரம் செய்யும் புரட்சிகர கம்யூனிசக் கருத்துக்களால் ஆகர்சிக்கப் படுகின்றனர். அதுவே வினவு இணையத் தளத்தின் வெற்றி எனலாம்.

"இதை இப்படியே விட்டு விடலாமா?"தந்தி டிவி விவாதத்தில், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக பேசிய, சரஸ்வதி, முருகன் மட்டுமல்ல, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கராஜ் பாண்டே கூட, அந்தக் கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அது தானே? அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் கருத்துகளுக்கும் சுதந்திரம் கொடுத்தால் என்னாகும்? நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா? அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: "உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான்!" 

நான் எழுதிய இந்தப் பதிவையும், தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளும், புலனாய்வுத் துறையினரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் தங்கள் கணனியில் சேமித்தும் வைக்கலாம். ஏற்கனவே அப்படி எல்லாம் நடக்கிறது என்பதைத் தான், தந்தி டிவி விவாத அரங்கமும் எமக்குத் தெளிவு படுத்தி உள்ளது.

ஆகவே, தோழர் கோவன் கைது செய்யப் பட்ட பின்னர், வினவு ஆற்றிய எதிர்வினையை சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன். "கோவன் பாடிய அதே பாட்டை பாடு அஞ்சாமல் பாடு!"என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, "பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது!"


தோழர் கோவன் பாடிய டாஸ்மார்க் ஒழிப்புப் பாடல்:


தந்தி டிவி இல் ஒளிபரப்பான விவாத அரங்கம்:

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

$
0
0
"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!"பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்"என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்"என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...."பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்"என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்"மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!"என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்"என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..."என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajoletகூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்."என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை"தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி"அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல!

$
0
0

ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.

விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. 

இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம். ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப் பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij.http://sunnah.com/muslim/12/206http://sunnah.com/bukhari/61/118)   

அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை "இஸ்லாமிய தேசம்"என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் "டாவ்லா" (Dawla) என்கிறார்கள்.

Kitaab Al Fitanநூல், இரும்பு மனம் படைத்த, "டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்"பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள். கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது. ISIS தலைவர் அபுபக்கர் அல் "பாக்தாதி", பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. (ISIS and the End of Times;  http://splendidpearls.org/2014/07/04/isis-and-the-end-of-times/)

ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS "இஸ்லாத்தின் பெயரால்"போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.


லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லா இராணுவம், ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னர், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி (LCP) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி இருந்தது. கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், தற்போது சிரியா நாட்டு எல்லையோரம் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவும், கடந்த சில வருடங்களாக ISIS எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. (https://www.youtube.com/watch?v=UD_IbVi9eyo)

இருப்பினும், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், கிறிஸ்தவர்கள், டுரூசியர்கள் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக உள்ளனர். (http://www.aljazeera.com/news/2015/09/lebanese-communist-fighters-gear-battle-isil-150919100740425.html



இஸ்லாமிய மதத்தின் பெயரில் இயங்கும், ISIS போன்ற தீவிரவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு, "உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்"என்று என்று அறிவுரை கூறும் மேதாவிகளுக்கு ஒரு விண்ணப்பம்.

உலகில் உள்ள எல்லா மதத்தவரையும் போன்று, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகள் அல்லர். மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். சோஷலிசத்தில், கம்யூனிசத்தில் அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதைத் தாங்கள் அறிவீர்களா? நீங்கள் அப்படியான முஸ்லிம்களை ஆதரிக்கலாமே?

உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக, சிரியாவின் வடக்கில் உள்ள குர்திய படையணிகள் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை காலமும் நடந்த யுத்தத்தில், ஆயிரக் கணக்கான ISIS தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.

பெரும்பான்மையான குர்தியர்கள், மதத்தால் முஸ்லிம்கள் தான். ஆனால், மதச்சார்பற்ற, சமதர்ம கொள்கையை நம்பும் முஸ்லிம்கள். ஆகவே, அப்படியான முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு உங்களுக்கேன் தயக்கம்?

"முஸ்லிம்கள் எல்லாம் மதவெறியர்கள்"என்று ஒரு பக்கச் சார்பான கதைகளை கூறி புலம்புவதை விட்டு விட்டு, மதச் சார்பற்ற முஸ்லிம்களை ஆதரிக்கும் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கலாமே?

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

$
0
0
ரஷ்ய Su24போர் விமானம், துருக்கி F16போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISISஉடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISISபோராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISISதொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISISகட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISISஅழிப்பு போர் நடத்துவதாக"பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISISஎண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.

இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

IDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண்டும் படங்கள்

$
0
0

நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரில், நவம்பர் 2015, சர்வதேச ஆவணப் படங்களின் திரைப்பட விழா (IDFA) நடைபெற்றது. அதில் நான் கண்டுகளித்த, மூன்று திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.




The Black Panthers: Vanguard of the Revolution

அமெரிக்காவில் அறுபதுகளில் இயங்கிய கருப்பின மக்களின் விடுதலை இயக்கமான கருஞ் சிறுத்தைகள் (Black Panthers) பற்றிய ஆவணப் படம்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் சம உரிமைகள் கொடுக்கப்படாமல் ஒடுக்கப் பட்ட காலத்தில் தோன்றிய மாவோயிச - கம்யூனிச இயக்கம் அது. அமெரிக்க உழைக்கும் மக்களின் விடுதலையையும், முக்கியமாக கருப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக அதன் அரசியல் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது. அதனால், கருப்பின மக்கள் மட்டுமல்லாது, வெள்ளையின ஏழை மக்களும் அந்த இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக இருந்த போதிலும், அதன் புரட்சிகர அரசியல் கோட்பாடுகள் அமெரிக்க அரசை அச்சுறுத்தின. ஆரம்பத்தில் அதன் உறுப்பினர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. ஆனால், அரசியல் நிர்ணய சட்டம் வழங்கிய உரிமையை பயன்படுத்தி துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

அமெரிக்க அரசு, கருஞ் சிறுத்தைகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்றும், கிரிமினல் கும்பல் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது. தலைவர் ஹூவி நியூட்டன் கைது செய்யப் பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு, கருப்பின- வெள்ளையின மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தினால் ஊடகங்களின் கவனம் குவிந்தது. அமெரிக்கா முழுவதும் கருஞ் சிறுத்தைகள் பிரபலமடையத் தொடங்கினார்கள். அவர்களும் ஊடகங்களின் கவனத்தைக் கவரும் வகையில் நடந்து கொண்டனர். கருஞ் சிறுத்தை உறுப்பினர் போன்று லெதர் ஜாக்கட் அணிவதும், இராணுவத் தொப்பி அணிவதும், சாதாரண இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

மக்கள் ஆதரவு பெற்ற இயக்கத்தை அழிப்பது மிகவும் கடினமானது. அதனால், கருஞ் சிறுத்தைகள் உறுப்பினர்களை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தும் சதி மேற்கொள்ளப் பட்டது. வெள்ளை இனவெறியூட்டப் பட்ட பொலிஸ், வேண்டுமென்றே சில உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

பொலிசாரின் சீண்டுதல் காரணமாக, பதிலுக்கு கருஞ் சிறுத்தைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அந்த இயக்கத்தை அழித்து விடுவது அரசின் நோக்கம். நிலைமை ஆபத்தான கட்டத்தை அடைந்த படியால், பொது மக்கள் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைக்க அஞ்சினார்கள்.

கருஞ் சிறுத்தைகள் இயக்கத்தின் சர்வதேச கிளை, அல்ஜீரியாவில் இயங்கியது. அமெரிக்காவுடன் எந்த வித இராஜதந்திர உறவுமற்றிருந்த அல்ஜீரியாவில் சர்வதேச செயலகம் அமைப்பது மிகவும் இலகுவாக இருந்தது. அங்கிருந்த படியே, சீனா, வியட்நாம், வட கொரியா போன்ற மூன்றாமுலக கம்யூனிச நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Stanley Nelson உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்காவின் சமூக வரலாற்றில், கருஞ் சிறுத்தைகள் ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானது என்று தெரிவித்தார். "இன்றைக்கு, இந்தத் திரைப் படத்தை பார்வையிடுவதற்காக, ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மழையையும், குளிரையும் பொருட்படுத்தாது இந்த அரங்கத்தில் கூடி இருக்கிறார்கள். கருஞ் சிறுத்தைகள் கொண்டு வந்த புரட்சி இன்னமும் மக்கள் மனதில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை அது நிரூபிக்கின்றது."என்றார்.

Driving with Selvi

தமிழ்நாட்டில் வசிக்கும், முதன்முதலாக டாக்சி ஓட்டி பிரபலமான பெண் சாரதி செல்வி பற்றி, சிலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். அவரது வாழ்க்கைக் கதை "Driving with Selvi"என்ற பெயரில் ஆவணப் படமாக வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த IDFA திரைப்பட விழாவில் அது திரையிடப் பட்ட பொழுது, பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில், செல்வியும் தனது குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த ஆவணப் படத்தை ஒரு NGO தயாரித்திருப்பதால், இடையிடையே NGO பிரச்சார வாடையும் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மற்றும் படி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக செல்வி படம் முழுவதும் பிரகாசிக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட செல்வி, சரளமாக தமிழும் பேசக் கூடியவர். அவர் தற்போது ஒரு தமிழ் வாலிபரை மறுமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

குடும்பத்தினரால் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட செல்வி, தனது கதையை சொல்லத் தொடங்குகின்றார். சிறுவயதில் தந்தையை இழந்த செல்வி, ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தாயால் கட்டாயப் படுத்தப் பட்டு திருமணம் செய்து வைக்கப் பட்டார். அதற்குப் பிறகு கணவனாக வந்தவன் தாங்க முடியாத அளவுக்கு துன்புறுத்திய படியால், கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டை விட்டோடி, (இந்தப் படத்தை தயாரித்த) NGO விடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

கொடுமைக்கார கணவனுடன் வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட தன்னை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முன்வரவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். வழமையான கொடுமைகள் போதாதென்று, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுக்குமாறு சித்திரவதை செய்ததாக சொல்லி அழுகின்றார். திருமணத்திற்கு முன்னர் தன்னைப் புரிந்து கொண்ட அண்ணனும், தன்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னதைக் கேட்டு, இரத்த உறவுகள் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதை குறிப்பிடுகின்றார். அதனால் இன்று வரையில் தனது குடும்ப உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழ்வதாகவும் கூறுகின்றார்.

கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக, எல்லா ஆண்களும் இப்படித் தான் என்ற விரக்தியில் இருந்திருக்கிறார். 15 வயதில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது, அதற்குப் பிறகு துரதிர்ஷ்டம் தொடங்கியது என்றிருந்தவருக்கு புதியதொரு துணை கிடைக்கிறது. விஜி என்ற தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபரின் காதல் கிடைத்த பின்னர், வாழ்க்கையில் தனது அதிர்ஷ்டம் ஆரம்பமானதாக கூறுகின்றார். இருவரும் மனமொத்து காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட பின்னர், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.

சிறு வயதிலேயே சொல்லொணா துன்பங்களை அனுபவித்து, தற்கொலைக்கு கூட முயற்சித்து உயிர் தப்பி விட்டார். அதற்குப் பிறகு, உலகிற்கு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்திருக்கிறார். அவரைப் போன்ற பல அபலைப் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் விரக்தியின் விளிம்பில் நின்ற செல்வி, தொழில் தகைமை கொண்ட சாரதியாக சாதித்துக் காட்டியதுடன், மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பது வியப்பிற்குரிய விடயம். அதனை படத் தயாரிப்பாளரே நேரில் கேட்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் செல்வி: "வாகனம் ஓட்டும் பொழுது ஒரு பாதை கரடுமுரடானதாக இருக்கும். இன்னொரு பாதை மிருதுவாக இருக்கும். வாழ்க்கையும் அது போலத் தான். மனம் தளராமல் புதியதொரு வாழ்க்கையை அமைத்து புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்வது தான் மகிழ்ச்சியின் அடிப்படை."படம் முழுவதும் செல்வியுடன் கூடவே பயணம் செய்த பார்வையாளர்கள், படம் முடிந்த பின்னர் பலத்த கரகோஷம் செய்து ஆதரவைத் தெரிவித்தனர்.

Under the Sun

வட கொரியாவை பார்க்கும் கோணத்தில், அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, வட கொரியா "தலையில் கொம்பு முளைத்த அசுரர்களின் தேசம்". ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு "சர்க்கஸ் கூடாரம்"!

தயாரிப்பாளர் Vitaly Manskyநெறிப்படுத்தலின் கீழ், Under the Sunஆவணப் படமானது, செக் (அல்லது ரஷ்யா) நாட்டை சேர்ந்த குழுவினரால், சுமார் ஒரு வருட காலம் வட கொரியாவில் தங்கி இருந்து படமாக்கப் பட்டுள்ளது.

பியாங்கியாங் நகரில் வாழும் Zin-mi குடும்பத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் படம் எடுக்கப் பட்டுள்ளது. அந்தக் குடும்பத்து சிறுமி தான் கதாநாயகி. அவள் பாடசாலையில் மாணவர் ஒன்றியத்தில் சேர்வது முதல் பிரமாண்டமான நடனக் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றுவது வரையில் படமாக்கியுள்ளனர். அதே மாதிரி, அவளின் பெற்றோர் வேலை செய்யும் தொழிலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

இது ஒரு ஆவணப்படமாக இருந்தாலும், கொரிய அரசின் மேற்பார்வையின் கீழ் நடந்தாலும், சில காட்சிகள் டைரக்டர் சொன்ன படி அமைந்துள்ளது போன்று தெரிகின்றது. பல இடங்களில் டைரக்டர் முத்திரை பதித்துள்ளார். எடிட்டிங் கூட கலைநயத்துடன் பேணப் பட்டுள்ளது. அதனால் படத்தின் கதாநாயகியான கொரிய சிறுமி கூட, சில இடங்களில் டைரக்டர் சொற்படி நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

குறிப்பாக சிறுமி முதன் முதலில் நடனம் பழகும் பொழுது அழுவது. பாடசாலையில் முன்னாள் போர்வீரர் உரையாற்றும் நேரம் தூங்கி விழுவது போன்றவற்றை சொல்லாம். பாடசாலைக்கு சமூகமளிக்கும் முன்னாள் போர்வீரர், மணிக்கணக்காக உரையாற்றும் நேரம், அதைக் கேட்கும் பொறுமை பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த முன்னாள் போர்வீரர், கொரியப் போரில் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய கதையை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமிக்கு தூக்கக் கலக்கத்தில் கண்கள் செருகுகின்றன. பின்னர் சுதாகரித்துக் கொண்டு கண்களை திறக்கிறாள். இப்படி குறைந்தது பத்து நிமிடங்கள் தூக்கத்துடன் போராட்டம் நடக்கிறது. டைரக்டர் அதைப் படமாக்கியுள்ள விதம், அரங்கில் இருந்த பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஐரோப்பிய மக்களின் பார்வையில் வட கொரியா ஒரு கிளுகிளுப்பூட்டும் மியூசியம் நாடு. அங்கு நடப்பன எல்லாம் நாடகத் தனமானவை. இயல்பான வாழ்க்கை அங்கே கிடையாது. படத் தயாரிப்பாளரும், அவ்வாறான ஒரு தலைப் பட்சமான ஐரோப்பிய கோணத்தில் இருந்தே படமாக்கியுள்ளார். அதனால் தான் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் கண்டதற்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தொழிலகத்தில் பணி புரியும் தொழிலாளர்கள், உற்பத்தி தொடர்பாக உரையாற்றும் காட்சி ஒன்று வருகின்றது. மிகச் சிறப்பாக வேலை செய்து, அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த பெண்மணிக்கு பாராட்டுத் தெரிவித்து பூச்செண்டு வழங்குகிறார்கள். சக தொழிலாளி எப்படிப் பேச வேண்டும் என்று முகாமையாளர் முன்கூட்டியே பயிற்சி அளிக்கிறார். இந்தக் காட்சிகளுக்கும் அரங்கில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

அது மட்டுமல்ல, இறுதிக் காட்சியில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து, கொரியப் போரில் மரணமடைந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னத்தில் பூச் செண்டுகளை அடுக்கி வைத்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு அதுவும் நகைச்சுவைக் காட்சி தான்! எது எதற்கு சிரிப்பது என்ற விவஸ்தையே இல்லையா? சிலநேரம், தமிழர்களின் கார்த்திகை மாத மாவீரர் நினைவுதினத்தை படமெடுத்துக் காட்டினாலும், ஐரோப்பியர்கள் இப்படித் தானே கேலி செய்து சிரிப்பார்கள்?

படம் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் Vitaly Mansky கேள்விகளுக்கு பதிலளித்தார். வட கொரியாவில் தங்கியிருந்த காலம் முழுவதும், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டதாக கூறினார். படமெடுத்து முடிந்த பின்னர், தனியான எடிட்டிங் அறை ஒன்றில் வீடியோ முழுவதையும் போட்டுப் பார்த்தார்களாம். இருப்பினும், தந்திரமாக கமெராவில் இரண்டு டிஸ்க் வைத்து, சில காட்சிகளை மறைத்தது பற்றி பிரஸ்தாபித்தார்.

இது போன்ற "வட கொரியாக் கதைகள்"ஒன்றும் ஐரோப்பாவுக்கு புதியன அல்ல. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வட கொரியா சென்று படமெடுப்பவர்கள் எல்லோரும், ஸ்காட்லான்ட் யார்ட் பயிற்சி பெற்ற துப்பறியும் சாம்பு மாதிரி நினைத்துக் கொள்வார்கள். "நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஒன்பதாம் மாடி இல்லை... டட்ட டாய்ங்... அங்கே என்ன நடக்கிறது.... வாருங்கள் துப்புத் துலக்குவோம்...""நாங்கள் சென்ற பஸ் வண்டி வழி தவறிச் சென்றது... அங்கே நாம் கண்ட காட்சிகள்...."இப்படித் தான் ஜூனியர் விகடன் பாணியில், வட கொரியா பற்றிய ஆவணப்படம் தயாரித்திருப்பார்கள்.

அதே மாதிரித் தான், இந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் Vitaly Mansky உம், வட கொரிய அதிகாரிகளை ஏமாற்றிய வீரப் பிரதாபங்களை பற்றி நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக, ரஷ்ய அரசின் உதவி பெற்று, வட கொரியா சென்று படமாக்கியுள்ளனர். அதனால் படம் தயாரித்து முடிந்த பின்னர், தங்களது "குளறுபடிகள்"பற்றி, வட கொரிய அரசு ரஷ்ய அரசிடம் முறைப்பாடு செய்ததாம். ஆகவே, படத்தின் முடிவில் நன்றி தெரிவிக்கும் பட்டியலில் ரஷ்யாவின் பெயரை எடுத்து விட்டு, ரஷ்யாவுக்கு வந்த சங்கடத்தை தவிர்த்தார்களாம்.

வட கொரியாவுக்குள் சென்று, அங்கிருந்த அரசு அதிகாரிகள் அறியாமலே உண்மை நிலவரத்தை படமாக்கி வந்ததாக கதையளந்த தயாரிப்பாளர் இறுதியாக ஒன்று சொன்னார். வட கொரியாவில் இன்டர்நெட் இல்லாத காரணத்தால், அவர்கள் தனது பெயரை கூகிளில் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாதாம். ஸ்ஸப்பா.... தாங்க முடியல....

முள்ளிவாய்க்காலில் காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில் கண்டுபிடிக்கப் பட்டார்

$
0
0

ஈழப்போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டுகளுக்கு பலியாகாமல் உயிர் தப்பிய இளைஞர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். நீண்ட காலமாக அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்தன. அந்த சம்பவத்தில் காணாமல்போன தன் மகன் திரும்பி வருவானா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் ஒருவரின் உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்தது. அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது காணாமல்போன புதல்வன் பற்றிய தகவல்களை இங்கே பிரசுரிக்கிறேன்.


(இடது பக்க மூலையில் இருப்பவர்) 

அண்மையில் யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றன. அதில் சமூகமளித்த பல பெற்றோர், தமது பிள்ளைகள் எத்தகைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற விபரங்களை தெரிவித்தார்கள். எனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய தாய், குறிப்பிட்ட விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகனின் கதை, இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. 

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில், பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு காட்சி வாரும். அரை நிர்வாணமாக்கப் பட்ட நிலையில், சில இளைஞர்கள் மணலில் இருத்தி வைக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது கைகள் முதுகுப் புறமாக கட்டப் பட்டிருக்கும். அவர்களது பார்வைகள் வெறிச்சோடிப் போயிருக்கும். அருகில் இருந்த இராணுவத்தினர் பிற கைதிகளை சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வை கண்முன்னால் பார்ப்பது போன்றிருக்கும். இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆதாரமாக அது உள்ளது.

சனல் 4 ஆவணப்படத்தில், உயிருடன் இருப்பதாக காட்டிய காட்சியில், தனது மகனைக் கண்டதாக இந்தத் தாய் என்னிடம் தெரிவித்தார். (இங்கேயுள்ள படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்.) அந்த வீடியோவில் தனது மகனை இனம் காட்டும் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 

சனல் 4 காட்டிய படியால் சிலநேரம் தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்தத் தகவல் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றார். மேற்கொண்டு தேவையான விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.

மல்லாவி மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த தம் மகன், இறுதி யுத்த காலகட்டத்தில் புலிகளால் கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்லப் பட்டதை பெற்றோர் கண்டுள்ளனர். இராணுவம் புதுமாத்தளன் வரை முன்னேறி வந்த போது, பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஆனால் காணமல்போன புதல்வனும் இன்னும் பல இளைஞர்களும் அவர்களோடு செல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்.

முள்ளிவாய்க்காலில் காணாமல்போன மகன் பற்றிய விபரங்களை அவரது தாய் அனுப்பிய கடிதத்தில் உள்ள படியே இங்கே தருகின்றேன்:


"எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் காணாமல்போயுள்ளார். இவரை 20.04.2009 கடைசியாகக் கண்டேன். எனது பிள்ளை மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். இவரது கையில் பட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், கடைசியில் மகன் விலங்கிடப் பட்ட நிலையில் உள்ள படத்தை தான் காண முடிந்தது.
இடது பக்க மூலையில் இருப்பவர் 

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் சில காட்சிகளை, 15.03.2013 யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அப்போது தான் எனது மகனும் அந்தப் படங்களில் இருப்பதை கண்டுபிடித்தேன். அப்போது பாதுகாப்பின்மை காரணமாக அடையாளம் காட்ட முன்வரவில்லை. அந்த வீடியோக் காட்சிகளின் படி, எனது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன். எனது மகனைத் தேடித் தருமாறு உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."


இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

$
0
0

De Telegraaf, 13-01-2016

சிரியாவில், "இஸ்லாமிய தேசம்"என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.

அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:


- ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

- ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது. அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.

- ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர். உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.

- ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.

- ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

- கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.

- குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

- பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.

- பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

- பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

- பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

- தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன. ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.

- குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.

- ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.

- மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.

ஷோபாசக்தியின் அவியாத பொங்கலும் தமிழ் தேசியர்களின் வாய்ப் ப‌ந்த‌லும்

$
0
0

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும், பிரபல எழுத்தாளர், திரைப்பட நடிகர் ஷோபாசக்தி என்ற அந்தோனிதாசன், மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்த தடவை தைப் பொங்கல் பற்றிய அவரது கட்டுரை குட்டையை குழப்பி விட்டுள்ளது. அதற்குப் பதில் அளிப்பதற்காக "வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்" (http://www.shobasakthi.com/shobasakthi/?p=1246) என்ற தலைப்பின் கீழ் இன்னொரு கட்டுரை எழுதி இருக்கிறார். ஷோபா சக்தி சொல்ல வருவது இதைத் தான். தைப் பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே உரிய விசேட பண்டிகை அல்ல. அது இந்திய இந்துக்களின் பண்டிகை. அதற்கு அவர் கூறும் விளக்கம்:

 //இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?//

பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்று வாதிடுபவர்கள் செய்யும் அதே தவறைத் தான் ஷோபாசக்தியும் செய்கிறார். அது இந்துக்களின் பண்டிகை என்று நிறுவுவதற்கு விக்கிபீடியா முழுவதும் தேடி ஆதாரங்களை கொண்டு வந்து அடுக்குகிறார். பொங்கல் உண்மையில் தமிழர்களுக்கு மட்டுமே உரிய பண்டிகையல்ல. ஆனால், அதை இந்துக்களுடையது என்று கூறுவதும் தவறாகும். 

பொங்கல் ஓர் உழவர் திருநாள் என்றால், மனித சமுதாயம் முதன் முதலாக விவசாயத்தை கண்டுபிடித்த காலத்தில் இருந்து இருந்திருக்க வேண்டும். பொங்கல் நாளன்று சூரியனுக்கு படைக்கிறார்கள் என்றால், உலகில் சூரிய வணக்கம் தோன்றிய காலத்தில் இருந்து இருந்திருக்க வேண்டும்.

பொங்கல் தமிழர்களது பண்டிகை என்று சொல்பவர்களுக்கு சில அரசியல் குறிக்கோள்கள் உள்ளன. //பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள்.// இவ்வாறு ஷோபாசக்தி எழுதுகின்றார். 

அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால், அது தமிழர்களின் விழா என்று நிறுவுவதற்குப் போதாது. அந்தப் போதாமையை ஷோபாசக்தி தனது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
//பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.//

முதலில் தமிழர்கள் என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு மொழியின் பெயர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் தான், தமிழ் அல்லது அதன் கிளை மொழிகளைப் பேசும் அனைவரும் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்டனர். சங்க காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தமிழர் என்ற உணர்வு இருக்கவில்லை. 

அரச கரும மொழியாக இருந்த தமிழை புலவர்கள் வளர்த்தனர். தமிழில் இலக்கியம் படைத்த புலவர்கள் வீட்டில் வேறு மொழி பேசி இருக்கலாம். பொங்கல் விழா பற்றி தமிழில் எழுதி விட்டார்கள் என்பதற்காக அதை தமிழர்களின் தேசிய விழா என்று நிறுவ முடியாது. அதற்காக அதனை இந்துக்களின் மதத் திருவிழா என்றும் கருத முடியாது. 

தமிழர் என்ற இன அடையாளம் கற்பிதம் தான். அதே போன்று, இந்து என்ற மத அடையாளமும் பிற்காலத்தில் உருவானது தான். இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய - மொகலாயர்கள் உள்நாட்டு பூர்வீக மதங்களை "ஹிந்துஸ்தான் மதம்"என்ற பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் இந்து மதம் என்றாகி விட்டது.  

கொரியர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள். "மிலேச்சத் தனமான சர்வாதிகாரி ஆளும்", "மதச் சுதந்திரம் அடக்கப்படும்", வட கொரியாவில் அனுமதிக்கப் பட்ட ஒரேயொரு பண்டிகையும் பொங்கல் மட்டும் தான். கொரிய மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள் அல்லது பௌத்தர்கள். சீனாவில் உள்ள கன்பூசிய மதம் மாதிரி, கொரிய மரபில் தோன்றிய ஷோண்டோ மதம் உள்ளது. ஆனால், அங்கே இந்துக்கள் யாரும் கிடையாது. மேற்படி மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. கொரியர்கள் தமிழர்கள் என்றும் யாரும் சொல்வதில்லை.

ஒரு காலத்தில், உலகம் முழுவதும் விவசாயப் பொருளாதாரத்தை மட்டும் நம்பியிருந்த மக்கள், அறுவடைக் காலத்தை பெரும் விழாவாக கொண்டாடி வந்தனர். சூரியனை கடவுளாக வழிபடும் வழக்கம், மதங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே பின்பற்றப் பட்டு வருகின்றது. வர்ணாச்சிரம கால பிராமண மதத்தில் சூரிய பகவான் வழிபடப் பட்டு வந்தாலும், பிற்கால இந்து மதத்தில் அது கைவிடப் பட்டது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள், ஆரிய மயப் பட்டிருந்தனர். அவர்கள் இந்திரவிழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடி இருந்தால் அதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதற்காக, பொங்கல் இந்துக்களின் பண்டிகை என்பது அபத்தமான கூற்று.

//இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.... இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள் -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது.// - ஷோபாசக்தி 

இங்கே அவர் குறிப்பிடும் "தமிழ்"பஞ்சாங்கக் கலண்டர், உண்மையில் சம்ஸ்கிருத பஞ்சாங்கத்தை பின்பற்றியது தான். வான சாஸ்திரம் இந்து மதத்திற்கு உரிய தனிச் சொத்து அல்ல. பன்னிரெண்டு ராசிகளையும் இந்து மத சாஸ்திரங்கள் பிரிக்கவில்லை. சுமேரியர் காலத்தில் இருந்தே பன்னிரெண்டு ராசிகளைக் கொண்ட வான சாஸ்திரம் பின்பற்றப் பட்டு வருகின்றது. அதற்கு இந்து மதம் ஏக போக உரிமை கொண்டாட முடியாது.

இந்த இடத்தில், ஏன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்ற விளக்கத்தையும் குறிப்பிட வேண்டும். இந்து மதம் என்ற ஒன்று எந்தக் காலத்திலும் உலகில் இருக்கவில்லை. அதற்கு மாறாக, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டும் மதம் என்று சொல்லக் கூடிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. மதம் என்பது அதற்கேயுரிய தனித்துவமான கொள்கைகள், தத்துவங்கள், நெறிகளைக் கொண்டுள்ளது. அவற்றை முடிந்த முடிவாக வரையறுத்துக் கொள்கின்றது. நம்பிக்கையாளர்களை நிறுவனப் படுத்தி வைத்திருக்கின்றது.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளில் பன்னிரெண்டு ராசிகளைக் கொண்டு பஞ்சாங்கம் கணிக்கும் வழக்கம் இருந்தது. அரேபியாவில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் கோயில்கள் இருந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய, பெரியாரிய அல்லது மார்க்சிய கொள்கைகளை ஏற்றுக்கொண்ட, இந்துத் தமிழர்கள் பலருக்கு அவை மூட நம்பிக்கைகளாக தெரிகின்றன. (எனது நண்பர் ஷோபாசக்தியும் அவர்களில் ஒருவர் தான்.) அதே மாதிரித் தான், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களும் அவற்றை மூட நம்பிக்கைகளாக கணித்திருந்தன. கிறிஸ்தவம் கோலோச்சிய ஐரோப்பாவிலும், இஸ்லாம் கோலோச்சிய மத்திய கிழக்கிலும், ராசி பலன் பார்க்கும் வழக்கம் தடை செய்யப் பட்டிருந்தது.

மத்திய கிழக்கில், கிறிஸ்தவத்திற்கு, அல்லது இஸ்லாத்திற்கு முந்திய, பொங்கல் போன்ற பண்டிகைகளும் தடை செய்யப் பட்டன. அதனால் தான் முஸ்லிம்கள் மசூதிகளில் பொங்கிப் படைப்பதில்லை. அது, இஸ்லாமிய நாகரிகத்திற்கு முந்திய, மூட நம்பிக்கையை ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். கிறிஸ்தவர்களும் அதே காரணத்திற்காகத் தான் பொங்கல் கொண்டாடுவதில்லை.

அப்படியானால், எதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கினார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி தான். மேற்கு ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளினால் தான் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் பரப்பப் பட்டது. அவர்கள், எப்படியோ தமது மதத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தில், "புதிய கத்தோலிக்கர்கள்"தமது பாரம்பரிய மதப் பழக்க வழக்கங்களையும் பின்பற்ற அனுமதி அளித்தனர். மெக்சிகோ போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில், இன்றைக்கும் பூர்வீக மாயா, அஸ்தேக் மதச் சம்பிரதாயங்கள், கத்தோலிக்க மதத்தின் பெயரில் பின்பற்றப் படுகின்றன.

பொங்கல் பற்றிய கட்டுரையில் இருந்த தவறுகளை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஷோபாசக்தி எழுதுவதெல்லாம் சரியானதல்ல. இருந்தாலும், ஷோபாசக்தி எழுதி விட்டார் என்பதற்காகவே எதிர்ப்பதும் சரியல்ல. "ஷோபாசக்தி கிறிஸ்தவராகப் பிறந்து விட்ட படியால் இந்துத்துவம் பற்றிப் பேசக் கூடாது..."என்று சில இந்து- முல்லாக்கள் பத்வா பிறப்பிக்கின்றனர். "உயர்சாதியில் பிறந்து விட்ட காரணத்தால் ஷோபாசக்தி தலித்தியம் பேசக் கூடாது"என்பதும் அபத்தமானது. ஒருவர் சொல்லும் கருத்தை விமர்சிக்க வேண்டுமே தவிர, தனி மனிதரை அல்ல. இவையெல்லாம் விதண்டாவாதங்கள். 

இந்திய சமுதாயத்தை ஆரியம் எதிர் திராவிடம் என்று, கருப்பு - வெள்ளையாக பார்க்கும் கோட்பாட்டில் இருந்து இந்தத் தவறுகள் எழுகின்றன. 21 ம் நூற்றாண்டுத் தமிழ் தேசியவாதிகள், தம்மை திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் திராவிடக் கட்சியினர் தான், "தமிழனுக்கு தனி நாடு கோரும்"தமிழ் தேசியக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினார்கள் என்பதைப் பலர் அறியாமல் உள்ளனர். தனித் தமிழ்நாடு கோரிய அண்ணாத்துரையை இந்த இடத்தில் நினைவுகூரலாம். பொங்கல் தமிழர்களின் தனித்துவமான பண்டிகை என்ற அலப்பறை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்டுபிடிப்புகள் தான்.

மறுபக்கத்தில், ஷோபாசக்தி பெரியாரின் திராவிடர் கழக காலத்திலேயே நின்று விடுகிறார். ஆரியமும், இந்துத்துவமும் மட்டுமே நிலையானவை, எதிர்க்கப் பட வேண்டியவை என்று கருதுகின்றார். தலித்தியம் குறித்த முற்சாய்வுகளும் அதில் இருந்தே எழுகின்றன. சாதிய கட்டமைப்பு இந்து மதத்திற்கு மட்டுமே உரியது என்று கருதிக் கொள்கிறார். "சிங்கள பௌத்தர்கள், பாகிஸ்தானிய முஸ்லிம்கள் மத்தியில் கூட இறுக்கமான சாதியக் கட்டமைப்பு உள்ளது."நான் இந்தத் தகவலை, ஒரு தடவை ஷோபாசக்தியிடம் நேரடியாகவே தெரிவித்திருந்தேன்.

ஷோபாசக்தி தனது பொங்கல் பற்றிய கட்டுரையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை பின்வருமாறு கடந்து செல்கிறார்:
//இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.//

சமூக வலைத்தளங்களில் ஷோபாசக்தி மீதான விமர்சனங்களை காணும் போதெல்லாம் ஓர் உண்மை தெளிவாகும். ஷோபாசக்தி என்ன எழுதினாலும், என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். ஷோபாசக்தி முன்னர் புலி உறுப்பினராக இருந்த காலத்தில் குழந்தைப் போராளியாக இருந்தேன் என்று சொன்னால் அதைக் கிண்டல் அடிப்பார்கள். அவர் தானொரு கிழட்டுப் போராளியாக இருந்தேன் என்று சொன்னாலும் அதே நையாண்டிகள் தொடரும். 

தசாப்த காலமாகவே, ஷோபாசக்தி புலிகளின் மனித உரிமை மீறல்களை பற்றி எழுதி வந்த படியால், எப்போதும் யாராவதொரு புலி ஆதரவாளர் அவரை தூற்றிக் கொண்டிருப்பார். இவ்விரண்டு தரப்பினரும் ஒருவரில் ஒருவர் தங்கி இருப்பது தான் வேடிக்கை. புலிகள் என்ன செய்தாலும் எதிர்ப்பவர்கள் புலி எதிர்ப்பாளர்கள் ஆகிறார்கள். அது தவறானது மட்டுமல்ல, ஒரு தலைப் பட்சமானது. அதே மாதிரித் தான் ஷோபாசக்தி எதிர்ப்பாளர்களும். அவர் என்ன செய்தாலும் எதிர்ப்பார்கள். சினிமாப் படம் நடித்தாலும் எதிர்ப்பார்கள்.

ஷோபாசக்தி, தான் "புலிகளை கண்டிப்பதைப் போன்று பத்து மடங்கு அதிகமாக இலங்கை அரசை கண்டித்தேன்"என்று சொல்வார். ஆனால், அவர் எழுதும் பொழுது மனித உரிமைகள் நிறுவனங்களின் ஆதாரங்களை காட்டிப் பேசுவார். அதை வைத்து, இலங்கை அரசின் குற்றங்களையும், புலிகளின் குற்றங்களையும் பட்டியலிடுவார். பேரினவாத அரச ஒடுக்குமுறையையும், விடுதலை இயக்கமொன்றின் எதேச்சாதிகாரத்தையும் ஒரே தன்மை கொண்டவை என்று சமப் படுத்த முடியாது. 

புலிகளைப் பற்றி குறை கூறுவது, புலி விசுவாசிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அர்த்தமல்ல. அப்படி நான் சொல்ல வரவில்லை. ஆனால், மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களில், அரசு மட்டுமல்லாது, போராளிக் குழுக்களாலும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளதாக பட்டியலிடுவது ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசியல் ஆகும்.

போரில் சிங்களவன் செத்தாலும், தமிழன் செத்தாலும் வெள்ளையனுக்கு ஒன்று தான். இனங்களை ஒன்றுடன் ஒன்று மோத விட்டு விட்டு, ஆயுதங்களை விற்று இலாபம் சம்பாதிப்பார்கள். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதிபதிகள் போன்று நடந்து கொள்வார்கள். இறுதியில் நாட்டு மக்கள் அனைவரதும் தலைகளில் கடன் சுமைகளை ஏற்றி விடுவார்கள். 

புலிகளின் ஈழப் போராட்டம், எந்தளவு குறைபாடுகளை கொண்டிருந்தாலும், இலங்கையில் நியோ-லிபரலிச மேலாண்மையை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அந்த வகையில், புலிகள் தலைமை தாங்கிய தமிழ் தேசிய இனத்தின் போராட்டம், அமெரிக்கா தலைமையிலான மூலதன ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது தான். ஒரு ட்ராஸ்கிஸ்ட் - மார்க்சிஸ்டான ஷோபாசக்தி இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போன காரணம் என்ன?

அதற்கான காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் இலகு. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது அரசியல் வாழ்வை தொடங்கிய ஷோபாசக்தி, அதிலிருந்து முரண்பட்டு விலகிச் சென்றார். அதற்குப் பிறகு அந்த முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவதே அவரது அரசியல் அடையாளம் ஆகியது. இது ஷோபாசக்திக்கு மட்டுமே உரிய குணவியல்பு அல்ல. புலிகள் இயக்கத்தில் இருந்து முரண்பட்டு வெளியேறியவர் புலி எதிர்ப்பாளராகத் தான் இயங்க முடியும். 

சில புலி உறுப்பினர்கள், இயக்கப் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இத்தாலிக்கு புலம்பெயர்ந்து சென்ற, முன்னாள் புலிப் பொறுப்பாளர் மேத்தாவை குறிப்பிடலாம். அவர் பிற்காலத்தில் பிரான்ஸ் வந்திருந்து புலிகளுக்கு பணம் சேர்த்து அனுப்பி வந்தார். பணம் கையாடல் காரணமாக கொன்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக, புலம்பெயர்ந்து வந்த பின்னரும் தம்மை புலி விசுவாசிகள் போன்று காட்டிக் கொண்டவர்கள் பலருண்டு.

ஷோபாசக்திக்கு அப்படி ஒரு இக்கட்டான நிலைமை இருக்கவில்லை. ஆனால், புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்களையும் நம்பாத காலகட்டம் ஒன்றிருந்தது. அவ்வாறு விலகிச் சென்றவர்கள் டெலோ, தமிழீழக் கட்சி போன்ற இயக்கங்களில் ஊடுருவி உடைத்த வரலாறும் உள்ளது. அப்படியான நிலைமையில், ஷோபாசக்தி போன்றவர்கள் மிகத் தீவிரமாக புலி எதிர்ப்புவாதம் பேசுவதன் மூலம் தான், தம் மீதான சந்தேகத்தை போக்க முடிந்திருக்கும்.

இது புலிகளில் இருந்து விலகிச் சென்றவர்களுக்கே உரிய சிறப்பம்சம் அல்ல. புளட்டில் இருந்து விலகிச் சென்றவர்கள் தீவிர புளொட் எதிர்பாளர்களாக உள்ளனர். ஜேவிபி இல் இருந்து விலகிச் சென்றவர்கள் தீவிரமான ஜேவிபி எதிர்பாளர்களாக காணப் படுகின்றனர். 

இது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் அடைக்கலம் கோரிய ஸ்டாலினின் மகள், ஸ்டாலினிச எதிர்ப்பாளராக அரசியல் நடத்தினார். அமெரிக்காவுக்கு தப்பியோடிய பிடல் காஸ்ட்ரோவின் மகள், அங்கே மியாமியில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை திருமணம் செய்து கொண்டார். 

ஸ்டாலினின் மகளும், காஸ்ட்ரோவின் மகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக தம்மை அடையாளப் படுத்தலாம் என்றால், ஷோபாசக்தி தன்னை ஒரு புலி எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டதில் என்ன அதிசயம் இருக்கிறது?



தைப் பொங்கல் பற்றிய முன்னைய பதிவு:
தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் "கொலம்பஸின் வரைபடங்கள்"

$
0
0

புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள "கொலம்பஸின் வரைபடங்கள்"என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.

உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய "கூண்டு"நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.

ஈழத் தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)

இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் "புலி விசுவாசிகளில்"பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.

உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, "கொலம்பஸின் வரைபடங்களுடன்"உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 

தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, "தமிழ்க் கொலம்பஸ்கள்"ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு. 

வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். "பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன"என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் "விரும்பிக்"கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.

அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த "மூர் தேசியம்"அழிந்து விட்டது என்று கருத முடியாது.

புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் "நாடு கடந்த மூர் இராச்சியம்"அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த "கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு"எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த "மூர் இனப்படுகொலை", அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழம்"உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.

முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, "புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்"கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு:

பிற்போக்கு தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசும் "மார்க்சிய- அடிப்படைவாதி"!

$
0
0
தன்னை ஒரு மார்க்சிய அறிவுஜீவியாக காட்டிக் கொள்ளும், சாய்மனைக் கதிரை மார்க்சிஸ்டான "இலங்கை வேலன்"என்ற நபர், வலதுசாரி தமிழ்தேசியத்தை நியாயப் படுத்தும் கருத்துக்களை "தூய்மையான மார்க்சியம்"என்று கூறி வருகின்றார். 

இலங்கை அரசியலில் இது ஒன்றும் புதுமை அல்ல. ஏற்கனவே, சிங்கள இடதுசாரி கட்சிகளை சேர்ந்த கதிரை மார்க்சிஸ்டுகள் பலர், இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். சிங்கள தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்காக, மார்க்சிய சொல்லாடல்களை வரட்டுத்தனமாக பயன்படுத்துவார்கள். அதே பாணியில், இலங்கை வேலன் தமிழ் தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுகின்றார்.

தேசியவாதத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்காக, "வரையறைகளின் காலப்பொருத்தம் பற்றி!!!" (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/2015/12/blog-post.html) என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். மார்க்சியம் தனக்கு இறைவனால் அருளப் பட்டது என நினைத்துக் கொண்டு எழுதியுள்ள அபத்தங்களை கீழே பட்டியலிடுகிறேன். "இலங்கையில் என்ன நடக்கின்றது?"என்ற உப தலைப்பின் கீழ் எழுதியுள்ளவை தான், முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை.

கட்டுரையின் தொடக்கத்தில் இனம் என்ற சொல்லுக்கு கறுப்பர், வெள்ளையர், மங்கோலியர் என்று மானிடவியல் பாகுபாட்டை விவரித்து விட்டு, இலங்கை விடயத்தில் மட்டும் இனம் என்ற சொல்லுக்கு புதுமையான வியாக்கியானம் கொடுக்கிறார்: 
//மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது.// 

தமிழில் இனம் என்று சொல்லும் பொழுது, அது எப்போதும் சரியான அர்த்தத்தை தருவதில்லை. அதே மாதிரித் தான், இனவாதம் என்ற சொல்லும். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில், இனம் என்ற சொல் வெள்ளையர்கள், கருப்பர்கள் போன்ற நிறப் பாகுபாட்டை மட்டுமே குறிக்கும். ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களை "தேசியங்கள்"என்று வரையறுத்தார்கள். ஆனால், ஐரோப்பிய காலனிய எஜமானர்களினால் ஆளப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள் ethnic groupsஎன்று வேறு படுத்தப் பட்டனர். 

நாம் இன்று பேசும் நவீன தமிழ் மொழியானது, ஆங்கிலத்தில் இருந்து பல கலைச்சொற்களை மொழிபெயர்த்து பயன்படுத்துகின்றது. ஆகையினால், தமிழில் இவையெல்லாம் "இனம்"என்று பொதுப்படையாக மொழிபெயர்க்கப் பட்டன. தமிழில் மட்டும் தான் இந்தக் குழப்பம் என்று சொல்ல முடியாது. சிங்கள மொழியில் "ஜாதிய"என்ற சொல் இனத்தைக் குறிக்கும். அதாவது, சிங்களத்தில் சாதியை குறிப்பதும் அதே சொல் தான்.

தென்னாபிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மையினரின் அப்பார்ட்ஹைட் என்ற பெயரிலான பாகுபாட்டு அரசமைப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறை இனவாதம் பற்றியும் விளக்கம் தேவையில்லை. ஆனால், உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், சிம்பாப்வே, தென்னாபிரிக்காவில் விடுதலைக்காக போராடிய கருப்பின ஆயுதபாணி இயக்கங்கள், சிலநேரம் வெள்ளையின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தின. பிரிட்டிஷ் ஊடகங்கள், அப்படியான சம்பவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன. அதை "கறுப்பர்களின் இனவாதம்"என்று கண்டித்து வந்தன.

ஆகவே, வெறுமனே பாகுபாட்டு "சிந்தனை"மட்டுமே இனவாதமாக கருதப் படுவதில்லை. இனக்குரோத செயற்பாடுகள், எந்த இனத்தில் இருந்து வந்தாலும், அதை இனவாதமாக கருதுவது உலகப் பொதுப் புத்தி ஆகும்.

//இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும்.// 

இலங்கையில் இருப்பது இனவாதம் இல்லையாம்! "மார்க்சியத்தை கரைத்துக் குடித்த"வேலன் சொல்கிறார். எல்லோரும் நம்புங்கள்.உலக நாடுகளில் உள்ள அத்தனை இனவாதிகளும், வேலனின் கோட்பாட்டை பயன்படுத்தி தம்மை தற்காத்துக் கொள்ள முடியும். உலகில் நடக்கும் அத்தனை இனப் பகை போர்களையும், "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும், அதை எதிர்க்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும் இடையிலான முரண்பாடு"என்று விளக்கம் கொடுத்து விட்டு கடந்து செல்ல முடியும்.

இன்றைய உலகில் பாகுபாடு (discrimination)என்பது, எப்போதும் இனம், மதம், சாதி சார்ந்தே எழுகின்றது. அமெரிக்காவில் சிறுபான்மை கருப்பர்கள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஐரோப்பாவில் முஸ்லிம் குடியேறிகள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஈராக்கிலும், சிரியாவிலும், சுன்னி முஸ்லிம்களை, ஷியா முஸ்லிம்கள் பாகுபாடு காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது.

ருவாண்டாவில் ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும், டுட்சி, ஹூட்டு மக்களுக்கு இடையில் நடந்த இனப்படுகொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வதாம்? இரத்தவெறி கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட இனங்கள் எல்லாம், வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒடுக்கும் இனமாகவும், ஒடுக்கபடும் இனமாகவும் இருந்துள்ளன. இவற்றில் எது "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தன"? எது "எதிர்க்கும் பாகுபாட்டுச் சிந்தனை"? ஒவ்வொரு நாட்டு  இனப் பிரச்சினையையும் அவ்வாறு தெளிவாக வரையறுக்க முடியுமா? 

//தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது இந்த தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல.... 
தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.//

தமிழ் தேசியவாதிகளை, "தமிழ் மிதவாதிகள்"என்று மிதமாக வருடிக் கொடுக்கிறார். ஒரு காலத்தில் தமிழர்கள் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டார்கள்... ராஜராஜ சோழன் காலத்தில் தெற்காசியா முதல் இந்தோனேசியா வரை ஆண்டார்கள்... இது போன்ற வரலாற்றுப் பெருமிதங்களில் இருந்து தான் ஆண்ட பரம்பரைக் கோஷம் முளைத்தது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. தமிழ் தேசியவாதிகளே பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆள் ஒரு "மார்க்சிய அறிஞர்"அல்லவா? அதனால், "தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம்"என்று கோட்பாட்டு விளக்கம் கொடுக்கிறார். அது சரி? இது தமிழர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமா?

"இலங்கை வேலன்"என்ற புனைபெயரில் எழுதும் இந்த எழுத்தாளர், தேசியப் பெருமை பேசும் மேற்கைரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். அதனால், அவருக்கு ஐரோப்பிய தேசியவாதிகள், அவர்களது கோஷங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும்.

நோர்வீஜிய தேசியவாதிகளுக்கு வைகிங் சாகசக்காரர்கள் தேசிய வீரர்கள் ஆவார்கள். வைக்கிங் கடலோடிகள் ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த வரலாற்றுப் பெருமை பற்றி பேசுவார்கள். அதிலிருந்து நோர்வீஜியர்களின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுகின்றது. கிழக்கிந்தியக் கம்பனி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதனை காலனிய சுரண்டலின் சின்னமாக பார்க்கலாம். ஆனால், நெதர்லாந்து (டச்சு) தேசியவாதிகளுக்கு அது பெருமைக்குரிய தேசிய சின்னம். காலனி அடிமைப்படுத்திய கடலோடிகள் அவர்களது தேசிய வீரர்கள். அவர்களது ஆண்ட பரம்பரைக் கோஷம் காலனிய பொற்காலத்தை நினைவுபடுத்துகின்றது.

இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ஹிட்லரின் ஆண்ட பரம்பரைக் கோஷம் அமைந்திருந்தது. மேற்கைரோப்பா முழுவதிலும் ஜேர்மனிய இனம் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது என்று ஒரே போடாகப் போட்டான். ஸ்கண்டிநேவிய, டச்சு மொழிகளுக்கும், ஜெர்மன் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதால் மட்டும் அப்படிக் கூறவில்லை. ஆங்கிலேயரின் மூதாதையர் ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஆங்லோ- சாக்சன் இனத்தவர்கள். பூர்வீகத்தில் ஜெர்மன் மொழி பேசிய பிராங் இனத்தில் இருந்து தான் பிரான்ஸ் என்ற பெயர் வந்தது. ஸ்பானிஷ் மன்னர் பரம்பரையில் ஜேர்மனிய இரத்தம் தான் ஓடுகின்றது. இதிலிருந்து தான் ஜெர்மன் தேசியவாதிகளின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுந்தது. 

"தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோஷம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்."ஆமாம், உலகில் உள்ள எல்லா தேசியவாதங்களினதும் அடிப்படைக் கொள்கையே அது தானே?

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்தும், முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்தும் பிரிந்த நாடுகளில் பிற்போக்கான தேசியவாதிகள், இனவாதிகள் மேலாதிக்கம் பெற்றது எவ்வாறு? போல்ஷெவிக் புரட்சிக்கு முன்பிருந்த அதே இனவாத சக்திகள் மீண்டும் அரசியலை தீர்மானிக்கும் சக்தியானது எப்படி? 

சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்த பால்டிக் நாடுகளில் ஏன் இன்றைக்கும் ரஷ்யாவை வெறுக்கிறார்கள்? சிறுபான்மையான ரஷ்யர்களை ஒடுக்கிறார்கள்? எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா தேசியவாதிகள், ஜெர்மன் நாஸிகளை விடுதலை வீரர்களாக போற்றும் அளவிற்கு இனவாதிகளாக இருப்பது எப்படி? 

அங்கெல்லாம் லெனினின் கோட்பாடு எவ்வாறு செல்லுபடியாகாமல் போனது? செல்லுபடியாமால் போனால்கூடப் பரவாயில்லை. லெனினின் சிலைகளை அல்லவா உடைத்தார்கள்? அவர்கள் லெனின் சிலைகளைக் கூட, ரஷ்ய பேரினவாத சின்னம் என்று சொல்லித் தான் உடைத்தார்கள் என்ற உண்மை "மார்க்சிய அறிவுஜீவி"வேலனுக்கு தெரியுமா? 

இன்று பால்டிக் நாடுகளிலும், உக்ரைனிலும் மீண்டும் பிரபலமாகும் நாசிஸத்தை, "வேலன் தான் கற்ற மார்க்சிய விஞ்ஞானம்"கொண்டு விளக்குவாரா? நாசிஸ ஆதரவு தேசியவாதங்களையும், மார்க்சியம் கொண்டு புனிதமாக்க முடியாது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நடைமுறை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் சமூக விஞ்ஞானம்.

Ilankai Velan,நீங்க‌ள் பேசுவ‌து ஒரு வ‌கையில் "மார்க்சிய அடிப்ப‌டைவாத‌ம்"(dogmatism).புனித நூலில் எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கோரும் ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் மாதிரி, மார்க்சியம் தொடர்பான உங்க‌ள‌து க‌ருத்துக்க‌ள் அமைந்துள்ள‌ன‌. அறிவுஜீவித்தனத்துடன் மார்க்சிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டித்து அப்ப‌டியே ஒப்புவிக்க‌ப் பார்க்கிறீர்க‌ள். அதை ச‌ரியென்று ந‌ம்புகிறீர்க‌ள்.

உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ளை "வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ சித்தாந்த‌வாதிக‌ள்"என்று சொல்வார்க‌ள். பெரும்பாலும் "க‌திரை மார்க்சிஸ்டுக‌ள்". ஒரு மேட்டுக்குடி ம‌ன‌ப்பான்மையுட‌ன் மார்க்சிய‌ம் பேசுவீர்க‌ள். உங்க‌ள‌து வ‌ர்க்க‌மும் அதுவாக‌ இருக்கும். அத‌னால் தான் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் பேசும் மார்க்சிய‌த்தால் ம‌க்களை க‌வ‌ர‌ முடியாம‌ல் உள்ள‌து. நீங்க‌ள் உழைக்கும் ம‌க்க‌ளுக்கு புரியாத‌ மொழியில் பேசிக் கொண்டு, அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ள்ளி நிற்கிறீர்க‌ள்.

நீங்க‌ள் வ‌ர‌ட்டுத்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றும் மார்க்சிய‌ ஆசான்க‌ள் சுய‌நிர்ண‌யம் தொட‌ர்பாக‌ ஒருமித்த‌ க‌ருத்தைக் கொண்டிருக்க‌வில்லை. அதாவ‌து எந்த‌ நிப‌ந்த‌னையும் இன்றி எல்லா சுய‌நிர்ண‌ய‌ங்க‌ளையும் ஆத‌ரிக்க‌வில்லை. ஐரிஷ் சுயநிர்ணயத்தை ஆதரித்த கார்ல்மார்க்ஸ், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உடைத்து நொறுக்கும் என்று நியாயப் படுத்தினார்.

பெரும்பான்மை ஐரிஷ் மக்கள் பாட்டாளி வர்க்கத்தினராக இருந்ததும், சோஷலிச அமைப்புகள் தேசிய விடுதலையை முன்னெடுத்ததையும் கார்ல் மார்க்ஸ் சாதகமாகப் பார்த்தார். முதலாம் உலகப்போருக்கு பின்னர், பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்று மூன்றாம் கம்யூனிச அகிலம் தீர்மானம் நிறைவேற்றியது. அதிலும் தேசங்களின் சுயநிர்ணயத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக கருதும் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ரோசா ல‌க்ச‌ம்பேர்க் ஒடுக்கப்பட்டபோலிஷ் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தும், போலிஷ் தேசிய‌த்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இதுதொடர்பாக லெனினுக்கும், ரோசா லக்சம்பேர்க்குக்கும் இடையில் பெரும் விவாதங்கள் நடந்தன. ர‌ஷ்ய‌ பெரும்பான்மை இனத்தை சேர்ந்த லெனின், சிறுபான்மையின போலிஷ் தேசிய‌த்தை ஆத‌ரித்தாலும், அதே நேரம் யூத‌ர்க‌ளுக்கு எதிரான‌ போலிஷ் இன‌வாத‌த்தை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்று நேரடியாகவே கூறினார்.

தேசங்களின் சுய‌நிர்ண‌ய‌ம் ப‌ற்றி நூல் எழுதிய‌ ஸ்டாலின், த‌ன‌து சொந்த‌ நாடான‌ ஜோர்ஜியாவில் வ‌ல‌துசாரி தேசிய‌வாதிக‌ள் த‌னிநாடு பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இராணுவ‌த்தை அனுப்பி அட‌க்கினார். அயலில் இருந்த அச‌ர்பைஜான் தேசிய‌வாதிக‌ளின் சுதந்திர தனிநாடும் பறிக்கப்பட்டது. அவர்கள் தமது த‌னி நாட்டுக் கோரிக்கையை இஸ்லாமிய ஜிகாத் ம‌ய‌மாக்கினார்க‌ள். அதுவும் அட‌க்க‌ப் ப‌ட்ட‌து. மத்திய ஆசியாவில் துருக்கேஸ்தான் தேசத்திற்காக போராடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், செம்படையினரால் ஒடுக்கப் பட்டனர்.

எந்த விதமான வர்க்க கண்ணோட்டமும் இன்றி, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று மார்க்சியம் கூறவில்லை. இன‌வாத‌த்திற்கு ப‌திலாக‌ இன்னொரு இன‌வாத‌த்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கார்ல் மார்க்ஸ் முன்மொழியவில்லை. ஒருதேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் அதே நேரம், ஒடுக்கும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும், ஒடுக்க‌ப் ப‌டும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும் உண‌ர்வுத் தோழ‌மையுடன் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று லெனின் விரிவாக எழுதியுள்ளார். நீங்க‌ள் பேசுவ‌து மார்க்சிய‌ம் அல்ல‌. அது எதற்கும் உதவாத வரட்டுவாதம்.

நீங்க‌ள் மார்க்சிய‌ முலாம் பூசிய த‌மிழ் தேசிய‌ம் பேசுகின்றீர்க‌ள். அது உங்கள் மத்தியதர வர்க்க நலன் சார்ந்தது. நீங்கள் ஒரு சிங்களவராக பிறந்திருந்தால், சிங்களத் தேசியம் முற்போக்கானது என்று வாதாடி இருப்பீர்கள். நீங்கள் பேசுவது இட‌துசாரி தேசிய‌ம் கூட அல்ல‌. அது அப்பட்டமான வ‌ல‌துசாரி தேசிய‌ம். அதனால் தான் இனமுரண்பாடுகளுக்கு ந‌டைமுறை சாத்திய‌மான‌ தீர்வு உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லை.

No Sex please! உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!

$
0
0

"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!"

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல "தமிழ் தேசிய"(?) இணையத் தளமான தமிழ்வின் (லங்காஸ்ரீ) இது போன்ற செய்திகளின் மூலம் தானும் ஒரு "காலாச்சாரக் காவலர்"என்று காட்டிக் கொண்டுள்ளது. 

தமிழ்வின் காதலர் தின ஸ்பெஷல் செய்தி போடுவதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான், கொழும்பு நகரில் மேற்கத்திய பாடகர் இக்லேசியாஸ்ஸின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது, பதின்ம வயது இலங்கை மகளிர் தமது உள்ளாடைகளை கழற்றி வீசினார்கள். அதையிட்டு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தானும் ஒரு கலாச்சாரக் காவலர் போன்று காட்டிக் கொண்டார். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், கூடவே முஸ்லிம் மதவாதிகளும் ஒன்று சேரும் புள்ளியும் இது (கலாச்சாரம்) தான்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் தமிழ்வின் இணையத்தளம், தனது நாட்டில் வாழும் எத்தனை பெண்கள் கன்னித் தன்மை இழந்துள்ளனர் என்று ஆய்வு செய்து பார்த்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யப் போனால் தனது குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகும் என்பது, தமிழ்வின் இணையத் தள நிர்வாகிக்கு தெரியாதா? மஞ்சள் பத்திரிகை மாதிரி "இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!"என்று இலங்கையில் வாழும் கன்னிப் பெண்களின் கற்புக்காக கண்ணீர் வடிக்கின்றது.

இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் தான் லங்காஸ்ரீநடத்துகிறார். தனது அண்ணனின் தேர்தல் வெற்றிக்காக இலவச விளம்பரம் செய்து வந்தார். அண்ணனும், தம்பியும் தமிழ் தேசியம் பேசியே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள். "உலகில் அதி புத்திசாலியான மூன்று இனங்கள் மூன்றும் ஆங்கில "J"எழுத்தில் தொடங்குகின்றன. அவை முறையே "ஜப்பானிஸ் (ஜப்பானியர்கள்), ஜூஸ் (யூதர்கள்), ஜாப்பானிஸ் (யாழ்ப்பாணிகள்) என்று பேசி மக்களை கவரத் தெரிந்தவர் ஸ்ரீதரன். அவரது தம்பி, சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டே, தமிழர்கள் யூதர்களை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறி வந்தார்.

தங்களை மட்டுமே புத்திசாலிகள் என்று கருதிக் கொள்ளும் யூத சியோனிஸ்டுகள், இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய பின்னர் யூதர்கள் மட்டுமே பிரஜைகளாக இருக்கலாம் என்று சட்டம் இயற்றினார்கள். அதாவது, விபச்சாரிகள் கூட யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் யூத தேசியவாதம். ஆனாலும் ஒரு பிரச்சினை இருந்தது. 

யூதப் பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தேசியவாதப் பெருமிதம் பேசிக் கொண்டே பாலியல் தொழிலை அனுமதிக்கலாமா? அதனால், ரஷ்யாவில் இருந்து குடியேறிய பாலியல் தொழிலாளர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். "நதாஷா"(Natasha) என்ற ரஷ்யப் பெயர் அங்கே பாலியல் தொழிலாளர்களை குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. அந்தப் பெண்களும் யூதர்கள் தான் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

யூதர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ்க் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருப்பார்களா? "காதலர் தினத்தன்று யுவதிகள் கன்னித் தன்மையை இழக்கிறார்கள்...", "பத்துப் பேருடன் படுத்தெழும்பிய பள்ளிக்கூட மாணவி..."என்று செய்திகளை வெளியிட்டு, இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்கள் கற்புக் கெடாமல் வாழ வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னரான பாலுறவை நிராகரிக்கும் பழமைவாதிகளின் கூச்சல் இணையத் தளத்தில் எதிரொலிக்கிறது.

"இதற்குத் தான் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டுமென்பது! தமிழீழத்தில் மணமுறிவு கிடையாது, பாலியல் தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், தகாத உறவுகளுக்கு இடமேயில்லை. பெண்களின் கன்னித்தன்மை பாதுகாக்கப் படும்." புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இன உணர்வாளர்கள், இப்படி பிரச்சாரம் செய்து தான் தமிழீழத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்கள். நல்லது, ஒருவேளை தமிழீழம் கிடைத்தால், அங்கே குடும்பத்துடன் சென்று குடியேற தயாராக இருக்கிறார்களா? 

கலாச்சாரக் காவலர்களின் போதனைகள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது காலங் காலமாக நடந்து வருகின்றது. ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில், ஆயுத முனையில் கலாச்சாரம் போதிக்கப் பட்டது. எண்பதுகளில் வந்த தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் டிஸ்கோ நடனம் பிரபலமாகியது. இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டிலும் அந்தக் கலாச்சாரம் பரவியது. 

ஊருக்கு ஊர் மேடைகள் போட்டு, டிஸ்கோ நடனம் ஆடினார்கள். தமிழகத்து பேபி ஷாலினி மாதிரி பாவனை செய்யும், ஈழத்து பேபி ஷாலினியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார். பிறகென்ன? ஒரு போராளி இயக்கம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டிஸ்கோ நடன விழாக்கள் அடியோடு நிறுத்தப் பட்டன. "ஈழத்து பேபி ஷாலினி"இந்தியாவுக்கு அகதியாக சென்றார்.

எண்பதுகளில் தான் இலங்கையில் தொலைக்காட்சிப் பெட்டிகளும், வீடியோ கசெட்டுகளும் அறிமுகமாகின. எல்லோரிடமும் வாங்கிப் பாவிக்க வசதியில்லாத நிலையில், சினிமாப் படங்களை வாடகைக்கு எடுத்து பார்த்தார்கள். ஊருக்கு ஊர் வீடியோ கசெட் வாடைக்கு விடும் கடைகள் முளைத்தன. வீடியோக் கடைக்காரர்கள், சினிமாப் படங்களுடன், ஆபாசப் (போர்னோகிராபி) படங்களையும் வாடகைக்கு விட்டு வந்தார்கள்.

கலாச்சாரக் காவலர்கள் ஆயுதங்களுடன் திரிந்த காலகட்டம் அது. ஆபாசப் பட விநியோகம் பற்றிக் கேள்விப் பட்டால் சும்மா இருப்பார்களா? எமது ஊரில் இருந்த வீடியோக் கடையை டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த வீடியோ காசெட்டுகளை எல்லாம் பறிமுதல் செய்து கடையை மூடச் செய்தார்கள். ஆபாசப் படங்கள் வாடகைக்கு விட்டதற்கு, அது தான் தண்டனையாம். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. கல்வியங்காடு எனுமிடத்தில் இருந்த டெலோ தலைமை முகாமை கைப்பற்றிய புலிகள், அங்கிருந்து நிறைய ஆபாசப் படக் காசெட்டுகளை கைப்பற்றினார்களாம். இந்தத் தகவலை அப்போது புலிகள் தான் அறிவித்தனர்.

எண்பதுகளில் தான் யாழ் நகரில் நவீன சந்தை கட்டப் பட்டது. அப்போது யாழ் குடாநாட்டிலேயே பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்த நவீன சந்தைப் பகுதியில், பாலியல் தொழிலாளர்களும் அதிகரித்தனர். அவர்கள் தமது வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு அது வசதியாக அமைந்து விட்டது. தமிழீழத்திற்கான போராட்டம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்லாது, சமூகவிரோதிகளுக்கும் எதிராக நடந்து கொண்டிருந்த காலம் அது. போராளி இயக்கங்கள் பாலியல் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று மின் கம்பத்தில் கட்டி விட்டன. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் எங்குமே பாலியல் தொழிலாளர்களை காணக் கிடைக்கவில்லை.

கன்னித் தன்மை இழப்பு, தகாத உறவு, பாலியல் தொழில், இவை மட்டும் தான் கலாச்சாரக் காவலர்களின் முக்கியமான பிரச்சினையாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில், அரச அங்கீகாரம் பெற்ற மதுபான சாலைகள் மிகவும் அரிதாக காணப் பட்டன. ஒன்றிரண்டு யாழ்நகர் போன்ற இடங்களில் இருந்தன. அனேகமாக கள்ளுக் கடைகள் தான் குடி மக்களின் ஒரேயொரு புகலிடம். ஊருக்கு ஊர் தவறணைகள் இருந்தன. 

அன்றிருந்த எல்லா ஈழ விடுதலை இயக்கங்களும் கலாச்சாரத்தை பாதுகாக்க கிளம்பிய நேரம், NLFTஎன்ற இயக்கம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தது. பல ஊர்களில் இருந்த கள்ளுத் தவறணைகளை தீயிட்டுக் கொளுத்தியது. எரித்து விட்டு அதற்கு விளக்கம் சொல்லி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தது. இதன் மூலம் மது விலக்கை அமுல்படுத்துகிறார்களாம்.

தற்போது மேற்கத்திய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரே கவலை. வட இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து விட்டன. இதனால், தமிழர்கள் குடிகாரர்களாகி வருகிறார்கள் என்று கவலைப் படுகிறார்கள். புலிகள் வைத்திருந்த de factoதமிழீழத்தில் கூட, கள்ளுத் தவறணைகள் இயங்கின. பனையில் இருந்து எடுக்கப் பட்ட வடி சாராயம் விற்கப் பட்டது. சாராயம் வடிக்கும் தொழிற்சாலையை புலிகளே நடத்தினார்கள்.

அது சரி, சுதந்திரமான மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் குடிப்பதில்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பாக்கியம் பெற்ற தமிழ் ஆண்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களும் குடித்து விட்டு கூத்தடிக்கலாம். இதெல்லாம் இங்கே சாதாரணமான விடயம் என்று சொல்வார்கள். ஆனால், இலங்கையில் வாழும் "பக்குவப் படாத"தமிழ் மக்களுக்கு தான் இந்த அறிவுரை எல்லாம்.

எதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு "கலாச்சாரம் பற்றி பாடம்"எடுக்கிறார்கள்? புலம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். விவசாய உற்பத்தி குறைவாகவுள்ள யாழ் தீபகற்பத்தில் இருந்து, முன்னொரு காலத்தில் கொழும்பு சென்று உத்தியோகம் பார்த்தார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் செல்வச் செழிப்பு ஏற்பட்டது. அப்போது அதை "மணியோடர் பொருளாதாரம்"என்று சொன்னார்கள்.

ஈழப் போர் தொடங்கிய பின்னர், ஏராளமான இளம் வயதினர், புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து அனுப்பிய பணத்தில் யாழ் குடாநாட்டின் செல்வம் மேலும் வளர்ந்தது. பெரும்பாலும் பணம் அனுப்புவோர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், காலப்போக்கில் அது ஒரு சமூகப் பிரிவினையை உண்டாக்கியது. ஊரில் இருக்கும் மக்கள் எல்லோரும் தாம் அனுப்பும் அந்நிய செலாவணியில் வசதியாக வாழ்வதாக புலம்பெயர்ந்தோர் நினைத்துக் கொண்டனர். அது ஓரளவு உண்மையும் கூட. ஆனால், வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிராத நிறைய குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையே களத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களே பெருமளவு நிதியுதவி செய்திருந்தனர். ஆனால், புலிகள் முற்றுமுழுதாக வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே தங்கியிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி சட்டபூர்வமாக, சிலநேரம் சட்டவிரோதமாக நடந்த வணிக நிறுவனங்களில் இருந்தும் கிடைத்து வந்தது. இருப்பினும், தங்களது பணத்தில் தான் போராட்டம் நடப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இறுமாப்புக் கொண்டிருந்தனர்.

இது ஒரு வகையில், பணக்கார கொடையாளி நாடுகளுக்கும், கடன் வாங்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான உறவு போன்றது. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF,உலகவங்கி போன்றன, பல நிபந்தனைகளை விதிப்பதில்லையா? அதே மாதிரித் தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுப்பதால் தமக்கு அறிவுரை கூறும் அதிகாரம் வந்து விடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் கலாச்சார சீர்கேடுகளை தடுத்து அவர்களை நல்வழிப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

தன்மானமில்லாத் "தமிழன்டா"! அமெரிக்காவின் அடிமைடா!!

$
0
0


இலங்கைத் தமிழ் பத்திரிகைகளில், இடதுசாரிகளை, கம்யூனிஸ்டுகளை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதும் தற்போது ஃபேஷனாகி விட்டது. வீரகேசரி, தினக்குரல், உதயன் என்று, பெரும் முதலாளிகளால் தமிழில் வெளியிடப் படும் இந்தப் பத்திரிகைகளின் வர்க்க சார்புத் தன்மை ஏற்கனவே தெரிந்த விடயம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

ஒரு காலத்தில், முதலாளித்துவ பத்திரிகைகள் யாவும், "தமிழர்கள் மத்தியில் இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் எவரும் இல்லை"என்பது போல காட்டிக் கொண்டன. வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. இது ஒரு வகையில், "சிறுபான்மையினத்தின் இருப்பை மறைக்கும் பேரினவாத உத்தி"போன்றது. ஒரு சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்பதை மறுப்பதும், ஜனநாயகப் பண்புகளை நசுக்குவதும் பாசிஸத்தின் கூறுகள் தாம். 

அந்த அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் என்றால், ரஷ்யா, சீனாவில் இருப்பார்கள்..."என்று அம்புலிமாமாக் கதைகளை பரப்பி வந்தனர். ஈழப் போரின் இறுதிக் காலத்திலும், அதற்குப் பிறகும், எடுத்ததற்கு எல்லாம் "கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா...."என்று போட்டுத் தாக்குவது வழமையாக இருந்தது. தனக்குத் தானே "அரசியல் ஆய்வாளர்"பட்டம் சூட்டிக் கொண்ட யாராவது, வார இதழில் கட்டுரை எழுதி இருப்பார்கள். 

அறுந்த அரசியல் ஆய்வாளர்கள், தமது கட்டுரையில் என்ன எழுதி இருந்தாலும் பரவாயில்லை. தலைப்பு மட்டும் "கம்யூனிச"சீனாவை, ரஷ்யாவை திட்டுவதாக இருக்கும். இந்த நாடுகள் எல்லாம், கடந்த முப்பது வருட காலமாகவே, முதலாளித்துவ நாடுகளாக இருந்து வருகின்றன என்ற உண்மை, அறுந்த ஆய்வாளர்களுக்கு தெரிவதில்லை. முப்பது வருடமாக கோமாவில் படுத்திருந்து விட்டு எழுந்தவன் போல, "ஏய்... ரஷ்யாவே! ஏய்... சீனாவே! இதுவா உன் கம்யூனிசம்!"என்று திட்டி திட்டி எழுதுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த அலப்பறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அது மட்டுமல்ல, தமிழ் இளையோர் மத்தியில் இடதுசாரிக் கருத்துக்கள், மற்றும் கம்யூனிசம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது.அம்புலிமாமா ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மாதிரி, அது ஒன்றும் ரஷ்யா, சீனாவில் இருந்து இறக்குமதியாகவில்லை. இன்றைய உலகமயமாக்கல் தான் இளைஞர்கள் மத்தியில் மாற்று சிந்தனை குறித்த தேடலை உருவாக்கியது. உலகமயமாக்கல் என்றால் அமெரிக்கா இல்லாமலா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அமெரிக்கா அனுப்பி வைத்த நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லி இருந்தார். "ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம். தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால், அது திரும்பி வராது."

2006 ம் ஆண்டு, புலிகளை கடுமையான தொனியில் எச்சரித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Jeffrey Lunstead, "இனப்படுகொலை"நடத்தவும் தயங்க மாட்டோம் என்பதை சூசகமாக குறிப்பிட்டார். "புலிகள் சமாதானத்தை கைவிட்டு விட்டு போருக்கு திரும்பினால், பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். மிகவும் பலமான, தீர்க்கமான சிறிலங்கா இராணுவத்தை சந்திக்க வேண்டி இருக்கும்...."என்று தெரிவித்தார். 
  US Ambassador Jeffrey Lunstead made it clear that Washington wanted the “cost of return to war to be high” to the Liberation Tigers of Tamil Eelam (LTTE). If the LTTE “abandon peace”, they would face a “stronger, more capable and more determined” Sri Lankan military, TamilNet quoted Lunstead as saying. 

அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை, வாய்ச் சொல்லில் மாத்திரம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்களை கொண்டு வந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அதனால், சிறிலங்கா கடற்படை அவற்றை சர்வதேச கடற்பரப்பிலேயே தாக்கி அழித்தன. அது மட்டுமல்லாது, அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கச் சென்றவர்கள் பிடிபட்டனர். ஆயுதத் தரகர்களாக நடித்த FBIஉளவாளிகள், அவர்களை பொறிக்குள் மாட்டி விட்டனர்.

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், அமெரிக்காவை நோக்கி சுண்டுவிரலை கூட நீட்ட முடியாத நிலையில் தமிழ் வலதுசாரிகள் உள்ளனர். அவர்களால் மேற்படி உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவும் இல்லை.

அதற்கு மாறாக, நடந்த பிரச்சினைகளுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத கம்யூனிஸ்டுகளை வம்புக்கிழுக்கும் பணியை, தமிழ் முதலாளித்துவ பத்திரிகைகள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. பலசாலியான எதிராளியுடன் மோத முடியாத ஒருவன், வீட்டில் இருக்கும் அப்பாவி மனைவிக்கு அடித்து, தனது  ஆத்திரத்தை தீர்த்த கதை தான் இதுவும். (தமிழன்டா!)

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி முதலாளி, தற்போது யாழ் குடாநாட்டில் "தீபம்"என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு வருகின்றார். இதுவும் வழமையான முதலாளித்துவ ஆதரவு பத்திரிகை தான். அதிலே நாடியா என்பவர் "தமிழன்டா"என்ற பெயரில் கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ் சமூகத்தை கிண்டலடித்து நகைச்சுவையாக எழுதப்பட்ட கட்டுரை தான். ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் அது திணிக்கும் அரசியல் ஆபத்தானது. வலதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் பற்றி பரப்பி வரும் அவதூறான நச்சுக் கருத்துகளை, நகைச்சுவை என்ற தேன் தடவி உண்ணக் கொடுக்கிறது.

13.12.2015 தீபம் பத்திரிகையில் பிரசுரமான தமிழன்டா கட்டுரையின் கடைசிப் பந்தி இது:

//கோக்குமாக்கு கொம்மியூனிஸ்ற்

கொஞ்சம் வயது போனவர்கள் இருப்பார்கள். எப்போதும் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு, ஆளையாள் அடித்துவிடுபவர்களை போல விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததென ஒரு தரப்பு சொல்லும். சர்வதேச விசாரணையா, கூடவே கூடாதென இன்னொரு தரப்பு அடம்பிடிக்கும். இவர்களை விட இன்னொரு குறூப் கிளம்பும். போர்க்குற்ற விசாரணையின் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் ஏகாதிபத்திய நலன்கள் என்றொரு மீற்றிங் போடுவார்கள். நாலுபேர் கூடி நாள் முழுக்க அடிபடுவார்கள். அவர்கள் தான் கொம்யூனிஸ்ற் தோழர்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததா இல்லையா? சர்வதேச விசாரணையா, உள்ளக விசாரணையா என உள்நாட்டுக்குள் எல்லோரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அமெரிக்காவை கொண்டு வந்து கோக்குமாக்கு பண்ணுவது அவர்களின் இயல்பு.// 
(எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி: nadiyanice@yahoo.com)

"தமிழன்டா", "சிங்கலே"போன்ற இனவாதக் கோஷங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மறைப்பதற்கு நன்றாகவே உதவுகின்றன. இதனை கட்டுரை எழுதியவரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 


சிங்கள - பௌத்த பேரினவாத இயந்திரம், எவ்வாறு தமிழினவாதிகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். தற்போது இலங்கையில், சிங்கள இனவாத சக்திகள், "சின்ஹலே"என்ற பெயரில் ஸ்டிக்கர் பரப்புரை செய்து வருகின்றன.

"சின்ஹலே"என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. அது "சிங்கள இரத்தம்"என்ற இனவாதத் தொனி கொண்டது. இனவாதத்தை வெறுக்கும் முற்போக்கான சிங்களவர்கள், இதற்கெதிராக தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதனால், "சின்ஹலே"பிரச்சாரத்தை நடத்தும் அதே அமைப்பு, தற்போது "தமிழன்டா"என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளது.

எமது நினைவுக்கு எட்டிய வரையில், தமிழகத்தில் இயங்கும் தமிழினவாத அமைப்புகளான நாம்தமிழர் வகையறாக்கள் தான், "தமிழன்டா"பரப்புரை செய்து வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

"ஏகாதிபத்தியமா? அது எங்கே இருக்கிறது?"என்று பாமரத் தனமாகக் கேட்கும் அப்பாவியா நீங்கள்? 

ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர், இலங்கையில் எவ்வாறு ஏகாதிபத்தியம் கால் பதித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை கீழே தந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் "அமெரிக்காவுக்கும், ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?"என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பீர்கள் என்றால்.... தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் பற்றி எத்தனை தடவை எடுத்துக் கூறினாலும், அதையெல்லாம் புறக்கணித்து விட்டு,"அமெரிக்கா ஈழத் தமிழர்களின் நண்பன் (?)"என்று கூறி மக்களை ஏமாற்றுவோர் பலருண்டு. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியதைக் காட்டி, "இப்போது உலக நாடுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கப் போகின்றன"என்றார்கள்.

அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை அமெரிக்காவுக்கு அனுப்பி, தமது எஜமான்களை சந்தித்துப் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாகவே அமெரிக்க எஜமானின் நடத்தை அமைந்திருந்தது.

"இனப்படுகொலை பற்றிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யுமாறு"விக்னேஸ்வரன் அறிவுறுத்தப் பட்டார்.

ஈழப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மூடி மறைப்பதற்காக, "ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை..."என்று, எமக்கு அரசியல் போதிக்கும் தமிழ் வலதுசாரிகள், இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். வழமை போல இதைக் கண்டும் காணாதது போல, தமது கண்களை இறுக்க மூடிக் கொண்டு கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணில், அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் செலவில், இரண்டு நவீன மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்தது. கிளிநொச்சியிலும், ஓட்டிசுட்டானிலும், அவை அமெரிக்க நிதியுதவியில் கட்டப் பட்டுள்ளன. 

2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த போருக்குள் அகப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஷெல் வீச்சுகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் காயமடைந்து, மருத்துவ வசதி இன்றி மரணமடைந்தனர். அப்போது அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத, உயிர் காக்கும் மருந்துகளை கூட அனுப்ப மறுத்த அமெரிக்கா, நாற்பதாயிரம் தமிழ் மக்களின் பிணங்களின் மேல் இரண்டு மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதனை அமெரிக்க தூதரக அதிகாரி William Weinstein, நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்து  திற‌ந்து வைத்தார். (தகவலுக்கு நன்றி: அமெரிக்க தூதுவராலயம்; http://srilanka.usembassy.gov/pr-13feb2013.html)

தமிழ் மக்கள் மனதில் அமெரிக்க விசுவாசத்தை பரப்பி வரும், தமிழ் (முதலாளித்துவ) தேசிய ஊடகங்கள், இந்த செய்தியை பிரசுரிக்காது இருட்டடிப்பு செய்துள்ளன. ஒருவேளை, இந்த மருத்துவமனைகளை சீனா கட்டிக் கொடுத்திருந்தால், "தமிழருக்கு துரோகமிழைத்த கம்யூனிச சீனா ஒழிக!"என்ற கோஷம், அனைத்து ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக வந்திருக்கும். 

சிங்களப் பகுதிகள் சீனாவுக்கும், வட-கிழக்கு தமிழ்ப் பகுதிகள் அமெரிக்காவுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளன. யாரை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதை, வல்லரசு நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. ஆனால், அந்த உண்மையை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது தான், தமிழ்-முதலாளித்துவ தேசிய ஊடகங்களின் பணியாக உள்ளது. 

"எதிரி எமக்குள்ளே இருக்கிறான்."என்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் லீப்னெக்ட் கூறியது, ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கப் பட்டு வருகின்றது.  முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முதலாளித்துவ தமிழ் ஊடகங்களும் தமிழ் மக்களின் எதிரிகள் தான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய பிரதிநிதியான அவுஸ்திரேலியா, ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர், சிறிலங்கா அரசுடன் நெருங்கி உறவாடி வருகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல், தமிழீழம் அமைக்கலாம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

ராஜபக்சேக்களுடன் Scott Morrison 
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ் அகதிகளை, சிறிலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்து வரும், அவுஸ்திரேலியா குடிவரவுத் துறை அமைச்சர் Scott Morrisonஇலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தனது உற்ற நண்பர்களான ராஜபக்சேக்களை சந்தித்துப் பேசியதுடன், சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை பரிசளித்திருந்தார். 

அதே நேரம், யாழ்ப்பாணத்திற்கு சென்று ஆளுநர் சந்திரஸ்ரீ யையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்கவில்லை. (http://www.theaustralian.com.au/news/scott-morrison-visits-jaffna-snubs-chief-minister-cv-wigneswaran/news-story/0424779b74b2016b070fdbb2a85c44d2?sv=adb7efb136baa3a8541420dd6bc106d3

பில்கேட்சின் Microsoft நிறுவனம், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் முதலீடு செய்துள்ளது. அதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் பிரியமான அம்பாந்தோட்டையில், தெற்காசியாவுக்கான புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டியுள்ளது. 

இலங்கையில் கட்டப்பட்டுள்ள முதலாவது கணணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இதுவாகும். தமிழினப் படுகொலையாளிகளுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், பில் கேட்சும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளனர்.

அம்பாந்தோட்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கணனிகள், Laptop, Tablet ஆகியன, இலங்கையில் மட்டுமல்லாது, பிற ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப் படவுள்ளன. பில் கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவனம், EWISஎன்ற இன்னொரு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. (Microsoft, EWIS set up country’s first PC manufacturing plant at H’tota; http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84917)

தமிழ் இன உணர்வாளர்கள், மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராட முன்வருவார்களா? மைக்ரோசொப்ட் நிறுவனம், இலங்கையில் போட்டுள்ள முதலீட்டை வாபஸ் வாங்கி, அம்பாந்தோட்ட தொழிற்சாலையை மூடும் வரையில், மைக்ரோசொப்ட் தயாரிப்புப் பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப் படுமா?

தென் தமிழீழக் (கிழக்கிலங்கை) கடற்கரையோரத்தில், எண்ணை, எரிவாயு வளங்களை ஆய்வு செய்யும் உரிமையை, பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான Total S.A.பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், இலங்கை பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திமா வீரக்கொடியும், இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் Jean-Marin Schuhவும் கைச்சாத்திட்டுள்ளனர். (Govt. inks agreement with France's Total for oil exploration in East Coast; http://www.news.lk/news/business/item/12289-govt-inks-agreement-with-france-s-total-for-oil-exploration-in-east-coast)

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் கைகோர்த்த, பிரெஞ்சு அரசுக்கு எதிராக, தமிழ் இன உணர்வாளர்கள் கிளர்ந்து எழுவார்களா? சார்லி ஹெப்டோ படுகொலைகள் நடந்தநேரம் "Je suis Charlie"என்று சொல்லி அழுதவர்கள், தற்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்களா?

அரச அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகளிடம் தன்மானத்தை எதிர்பார்க்க முடியுமா? இல்லை, தமிழ் இன உணர்வை விட, யூரோ பண உணர்வு முக்கியம் என்று வாயை மூடிக் கொள்வார்களா? இவர்கள் தான், மேற்கத்திய அரசுக்களின் ஆதரவுடன், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு, தமிழீழமும் வாங்கித் தருவார்களாம். நம்புங்க மக்களே!

ஏகாதிபத்தியத்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு தமிழீழம் பற்றிப் பேசலாம். ஆனால், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமின்றி, ஈழம் விடுதலை அடைய முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து- தாலிபான்களின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்

$
0
0

இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு"நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவித்தல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி, பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.

இலங்கையில் எந்தவொரு தமிழ் ஊடகமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. "ஒன்றுக்கும் உதவாதவர்கள்"என்ற அர்த்ததில் "பேஸ்புக் போராளிகள்"என்று, சமூகத்தில் சிலரால் நக்கலடிக்கப் படுபவர்கள் தான், இந்தப் பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தார்கள். 

உண்மையில், "பேஸ்புக் போராளிகளால்"பரவலாக கண்டிக்கப் பட்ட பின்னர் தான், பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், தகவலுக்கு மறுப்புக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இறுதியாக பெப்ரவரி 26 அன்று, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த உத்தரவை மீளப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.  அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பேஸ்புக் போராளிகளுக்கு பயந்து வாபஸ் வாங்கிய சம்பவம், யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னர் நடக்கவில்லை. "அந்தப் பயம் இருக்கட்டும்!"

இந்தத் தகவல் இணையம் மூலம் மக்கள் மத்தியில் பரவி விட்ட படியால், தடையுத்தரவை வாபஸ் வாங்குவதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைக்கு, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், எந்தளவு சக்தி வாய்ந்த ஊடகமாக மாறிவிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம். (தமிழ்) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விழிப்புணர்வையும் இது எடுத்துக் காட்டுகின்றது. (பார்க்க: "இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்http://kalaiy.blogspot.nl/2014/02/blog-post_11.html)

தற்போது அந்தப் பிரச்சினையின் சூடு தணிந்து விட்டாலும், யாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் இந்து- தாலிபான்கள் மீண்டும் தமது ஒழுக்கக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கலாம். யாழ் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் திட்டம் கைகூடாத படியால், புற்றுக்குள் பதுங்கிக் கொண்ட, பழமைவாத - இந்துத்துவா நச்சுப் பாம்புகள், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆகையினால், யாழ் பல்கலைக்கழகம் விடுத்த விசித்திரமான ஒழுக்க விதிகளை பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் அறிவித்த மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க விதிமுறைகள் பின்வருமாறு: 
//மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். மாணவர்கள் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவிகள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.//

மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?"என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்:

1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் தடை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்ததற்கும், இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்தக் கட்டுப்பாடு, முஸ்லிம் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கு கொண்டு வரப் பட்டிருக்கலாம்? தாடி வைப்பது தமிழர் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. திருவள்ளுவரும், தமிழ்ப் புலவர்களும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள்.

2. டி - சேர்ட், டெனிம் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அதே நேரத்தில், தமிழரின் கலாச்சாரப் படி, வேஷ்டி கட்டி, சால்வை அணிந்து வர வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை? சேர்ட், காற்சட்டை அணிவது எந்த நாட்டுக் கலாச்சாரம்?

டெனிம் ஜீன்ஸ், ஒரு காலத்தில் தொழிலாளர்களால் மட்டுமே விரும்பி அணியப் பட்டது. தற்போது அந்த ஆடையை அனைவரும் அணிவதால், மேலெழுந்தவாரியாக வர்க்க சமத்துவம் பேணப் படுகின்றது. இதற்கு மாறாக கனவான்கள் உடுத்தும் காற்சட்டையை பல்கலைக் கழகம் அங்கீகரிக்கிறதா?

அல்ஜீரியாவில், GIA என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், ஆயுதப்போராட்டம் நடத்திய காலங்களில், ஜீன்ஸ் அணிவதற்கு தடைவிதித்தார்கள். அல்ஜீரியாவில் ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தாலேயே பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜீன்ஸ் விடயத்தில், யாழ் பல்கலைக்கழக அறிவித்தலுக்கும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அறிவித்தலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. மாணவிகள் சேலை கட்ட வேண்டும். ஆங்கிலேய காலனிய காலத்தில், காஞ்சிபுரம் புடவை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்த பின்னர் தான், அனைத்துப் பெண்களும் சேலை கட்ட ஆரம்பித்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த பெண்கள் சேலை உடுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

20 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் குறுக்குக் கட்டு கட்டி இருந்தமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சிறு வயதில் எனது பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அந்தக் காலங்களில், உயர்சாதி பெண்கள் மட்டும் தான் சேலை உடுத்தி இருந்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சேலை சாதி அந்தஸ்தின் அடையாளம். மற்றது, அதன் விலையும் அதிகம். ஆங்கிலேயரின் வருகையின் பின்னர், தொழிற்புரட்சியும் வந்தது. புதிய இயந்திரங்கள் பெருமளவு சேலைகளை உற்பத்தி செய்தன. அதனால், விலையும் மலிந்தது.

 

அனைத்துப் பெண்களும் சேலை உடுக்கத் தொடங்கியதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 19 ம் நூற்றாண்டு இறுதியில் கூட, இலங்கையில் பல பெண்கள் திறந்த மார்புடன் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் கட்டாயப் படுத்தி சேலை உடுக்க வைத்தார்கள். ஆனால், அது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருந்தது. சேலை உடுப்பதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் பற்றி தமிழர்கள் கொண்டுள்ள தப்பெண்ணம் பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், அண்மையில், கெய்ரோ மருத்துவக் கல்லூரி, மாணவிகள், ஊழியர்கள் நிகாப் அணிவதற்கு தடைவிதித்திருந்தது. நூறாண்டு காலமாக, துருக்கி பல்கலைக்கழகங்களில் முக்காடு அணிவதற்கு விதித்த தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தாலிபான் பாணியில் பழமைவாத சம்பிரதாயங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

"இருப்பவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?"என்று சிலர் புலிகளின் ஆட்சிக் காலத்தை சுட்டிக் காட்டி கேள்வி கேட்கலாம். பெண்கள் "அடக்கமாக"புடவை கட்டும் கலாச்சார பின்புலத்தில் இருந்து வந்த பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்தது ஒரு கலாச்சாரப் புரட்சி தான். 

யுத்தகளத்திற்கு சேலை கட்டிக் கொண்டு செல்ல முடியாது என்று ஒரு விவாதத்தை முன்வைக்கலாம். இருப்பினும், எண்பதுகள் வரையில் இருந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெண்கள் என்றைக்குமே ஜீன்ஸ் அணிந்திருக்கவில்லை. 

தப்பித்தவறி ஓர் இளம்பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால், ஊர் முழுக்க அவளைப் பார்த்து கேலி செய்யும். அப்பேர்ப்பட்ட பிற்போக்கான கலாச்சார பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்து புரட்சி செய்து காட்டினார்கள்.

சீனாவில், மாவோ காலத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை அணியும் ஆடைக் கலாச்சாரம், மாவோ காலத்தில் தான் உலகம் முழுவதும் பரவியது. 

எண்பதுகளில் ஆண்களும், பெண்களும் அணியக் கூடியதான, ஒரு வகை ஆடை பிரபலமானது. சில தமிழ்த் திரைப்படங்களின் தாக்கமாக இருக்கலாம். அதுவும் மாவோ கலாச்சாரத்தின் பாதிப்பால், இந்தியாவில் நக்சலைட்டுகள் மூலம் அறிமுகமானது. அது பார்ப்பதற்கு வட இந்திய உடை மாதிரி இருக்கும். ஆனால், ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தமை தான் இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சிறப்பம்சம்.

எழுபதுகளில் சீனாவில் பிரபலமாக இருந்த "மாவோ உடை" (Mao suit), 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஈழத் தமிழர்களுக்கு புலிகளால் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த உடை மூலம் பால் சமத்துவம் பேணப் பட்டது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் அடிக்கடி நடத்திய பொங்கு தமிழ் மேடை நிகழ்ச்சிகளில், ஆண்களும், பெண்களும், ஒரே மாதிரியான, மாவோ பாணி உடை அணிந்திருந்தார்கள். அதில், புலிகளின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் இருந்தமை வேறு விடயம்.

சீனாவில் இருந்து, குறிப்பாக மாவோவிடம் இருந்து புலிகள் சில விடயங்களை கற்றுக் கொண்டார்கள். அதை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான de facto தமிழீழத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எதற்கெடுத்தாலும், சீனாவை குற்றம், குறை சொல்லிக் கொண்டிருக்கும், வலதுசாரி- போலித் தமிழ் தேசியவாதிகள், குறைந்த பட்சம் புலிகளிடம் இருந்தாவது சில விடயங்களை கற்றுக் கொள்ளட்டும்.

உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்"விருது!

$
0
0

ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் "வாழ்நாள் சாதனையாளர்"விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்! 

லண்டனில் மாநகரில், த‌மிழ் தேசிய‌த்தின் குர‌லாக‌, "அனைத்துல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின்"பெய‌ரில் வானொலி, தொலைக்காட்சி ந‌ட‌த்தும் ஐ.பி.சி. நிறுவ‌ன‌ம், ஒரு சாதி வெறிய‌னுக்கு (Ramasamy Thurairatnam)"வாழ் நாள் சாத‌னையாள‌ர்"விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌வுள்ள‌து. அடுத்த‌தாக‌, பௌத்த‌ ம‌த‌ வெறிய‌ன் ஞான‌சார‌ தேரோ, சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேவுக்கும், ஐ.பி.சி. விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்கும் என‌ எதிர்பார்க்கிறோம்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ராமசாமி துரைரத்தினம் என்ற ஈழத் தமிழ் தேசிய "ஊடகவியலாளர்"(?), ஏற்கனவே தினக்கதிர் இணையத்தளத்தில், பழமைவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதி வருபவர். அவரது தீவிர வலதுசாரி குணாம்சமும், இடதுசாரி வெறுப்புணர்வும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். அப்படிப் பட்ட ஒருவர், சாதியவாதம் பேச மாட்டார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்களப்பு பெண்ணை திருமணம் செய்தவர். முன்னர் ஒரு காலத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் இயங்கிய  "தினக்கதிர்"பத்திரிகையிலும், பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து வெளி வந்த "தமிழலை"பத்திரிகையிலும் வேலை செய்தார். கருணாவின் பிளவு நடந்த காலத்தில் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார், அதன் பிற்பாடு தமிழ்த் தேசியவாதியான இரா.துரைரத்தினம், பின்னர் பிரபாகரனின் தலைமைக்கு விசுவாசியானார். தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு, தினக்கதிர் இணைய ஊடகத்தை நடத்துவதோடு GTV யிலும் வேலை செய்கிறார்.

கிழக்கு மாகாண பிரதேசவாதத்தை, வெறுமனே வட மாகாணத்திற்கு எதிரானது என்று பார்ப்பது தவறு. கிழக்கிலங்கையில் நிலவும் தமிழ் - முஸ்லிம் இனக்குரோதத்தை, அந்தளவு மோசமானதாக வேறெங்கும் காண முடியாது. சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு தினக்கதிர் இணையத்தளத்தில், துரைரத்தினம் எழுதி வரும் கட்டுரைகள் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை காணலாம்.

தன் மீது இனவாதி என்ற குற்றச்சாட்டு இருக்கிறதென்பது ஏற்கனவே அவருக்கும் தெரியும். கிழக்கு மாகாண இனத்துவ விகிதாசார அரசியல் பற்றிய ஒரு கட்டுரையை இவ்வாறு ஆரம்பிக்கிறார்: //கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும். இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.// (http://www.thinakkathir.com/?p=62282)

தமிழகத்தின் பிரபல தலித் அரசியல் ஆர்வலரான ரவிக்குமாருடன், பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் அவரை "பற நாயே"என்று சாதிவெறியுடன் திட்டியுள்ளார். இந்த விவகாரம் முகநூல் முழுவதும் பரவி. பலரால் கண்டிக்கப் பட்டதும், தனது முகநூல் கணக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

துரைரத்தினம் ரவிக்குமாரை "பற நாயே"என்று மட்டும் திட்டவில்லை. ஒட்டுமொத்த இந்தியர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அழிய வேண்டும் என்று சாபம் போட்டுள்ளார். முகநூல் உரையாடல் முழுவதும், இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துவேஷம் எதிரொலிக்கிறது. (இலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகள் மத்தியில் கூட, இந்தியத் தமிழர்கள் குறித்து தாழ்வான அபிப்பிராயம் உள்ளது.) 

உடைக் கட்டுப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து, தமிழகத்து தலித் ஆர்வலர் ரவிக்குமார் கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய துரை ரத்தினம்:
//ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை//, //என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே//என்று வசை பாடியிருக்கிறார். 

ஆனால் இப்போது, "தன்னை ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்"என்று, துரை ரத்தினம் தன்னிடம் கூறியதாக Gowripal Sathiri Sriமுகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

"ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்"என்று துரைரத்தினம் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. அதற்கான ஆதாரமாக, முகநூலில் நடந்த முழுமையான உரையாடலை இங்கே தருகிறேன்:











வட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை! வீட்டு வாடகை இல்லை!!

$
0
0

"எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை."இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

 தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:
- என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

- ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

- வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவரின் முழுமையான பேட்டி:

*******

தென் கொரியாவில், தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், கம்யூனிசத்தை வெறுப்பதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்! எக்காரணம் கொண்டும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாது! அப்படி திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

தனிப்பட்ட காரனங்களுக்காக தென் கொரியாவில் தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், பின்னர் ஒரு நேரம் தமது தவறை உணர்ந்து தாயகம் திரும்ப விரும்ப முடியாது. தென் கொரியாவில் வசிக்கும் நூற்றுக் கணக்கான வட கொரிய அகதிகள் தாமாகவே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தென் கொரிய அரசு அவர்களை தடுத்து வைத்துள்ளது!

Kim Ryon Huiபியாங்கியாங் நகரில் ஆடை தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஒரு மருத்துவர். வட கொரியாவைப் பொறுத்தவரையில், வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். அரசு அவர்களுக்கு பெரியதொரு வீட்டைக் கொடுத்திருந்தது. வட கொரியாவில் கிடைப்பது போல, இலவச வீடு, இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் பிற நாடுகளிலும் நடைமுறையில் இருப்பதாக அப்பாவித் தனமாக நம்பினார்.

கிம் ஒரு தடவை கடும் நோய்வாய்ப் பட்டதால், சிகிச்சைக்காக சீனாவுக்கு சென்றார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் சீனாவில், மருத்துவ சிகிச்சைக்கு நிறையப் பணம் செலவாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் பணத்தை எதிர்பார்த்த படியால், ஒரு உணவு விடுதியில் வேலை செய்தார். ஆனால், அடிமட்ட தொழில் செய்து, மருத்துவ செலவைக் கட்ட முடியவில்லை.

அப்போது, வட கொரிய அகதிகளை தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லும், பயண முகவர் ஒருவர் சந்தித்தார். தென் கொரியா சென்று நிறையப் பணம் சம்பாதித்து விட்டு நாடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பி தென் கொரியா சென்றவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

இவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டது மட்டுமல்லாது, இனிமேல் எந்தக் காலத்திலும் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். அது மட்டுமல்லாது, கம்யூனிசத்தை மறுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

கிம் தென் கொரியா சென்றவுடனேயே திரும்பிச் செல்ல விரும்பினாலும், அது முடியாத காரியமாக இருந்தது. வட கொரிய அகதிகள் தென் கொரியா வருவதற்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது! அவர்கள் திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

மேலதிக தகவல்களுக்கு: 
Defector wants to return to North Korea


******
வட கொரியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் நிறையப் பணம் கிடைக்கும்! வட கொரியாவில் என்ன நடக்கிறது என்ற செய்திகள் வெளியுலகை அடைவதில்லை. அதனால், அங்கிருந்து வெளியேறி தென் கொரியாவில் அடைக்கலம் கோரும் அகதிகளிடம் இருந்தே தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், வட கொரியாவில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று எதிர்மறையான தகவல்களை கூறுவோருக்கு நிறையப் பணம் சன்மானமாக வழங்கப் படும். இதனால் பணத்திற்கு ஆசைப் பட்டு பலர் பொய்யான கதைகளை புனைந்து சொல்கிறார்கள்.

வட கொரியாவில் நடந்தாக சொல்லப்படும், சித்திரவதைகள், கொலைகள், அட்டூழியங்கள் எந்தளவுக்கு கொடூரமாக விவரிக்கப் படுகின்றதோ, அந்தளவு அதிக பணம் கிடைக்கும். கதைக்கு ஏற்றவாறு 500 அமெரிக்க டாலர்கள் வரையில் கொடுக்கிறார்கள். பின்னர் அந்தக் கதைகளை சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு விற்று பெருமளவு இலாபம் சம்பாதிக்க முடியும். 

Why do North Korean defector testimonies so often fall apart?

ஈழத்தில் ஒளிந்திருக்கும் சாதிவெறி அதிசயம்

$
0
0
சாதிவெறியர் துரைரத்தினம் 

"இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்?" 
"புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி முற்றாக ஒழிந்து விட்டது..." 
"ஈழத் தமிழர்களில் சாதிப் பாகுபாடு இல்லை..." 
தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், இப்படியான கருத்துக்களை பொதுத் தளத்தில் அடிக்கடி சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிப்பது போன்று, ஒரு தமிழ் தேசியவாதியே பொதுத் தளத்தில் நடந்து கொண்டுள்ளார். (பார்க்க: உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்"விருது! http://kalaiy.blogspot.nl/2016/02/ibc.html)

அவர் ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. புலம்பெயர்ந்து வாழும், புலிகளின் ஆஸ்தான ஊடகவியலாளர் என்பது மாதிரி காட்டிக் கொண்டவர். புலிகளின் நேரடி சிபாரிசின் பேரில் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர். இன்று வரைக்கும் தமிழ் தேசிய கொள்கை வகுப்பாளர் போன்று, தினக்கதிர் இணையத் தளத்தில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பவர். அவர் பெயர் இரா. துரைரத்தினம்.

IBC வழங்கிய "வாழ்நாள் சாதனையாளர் விருது"

"உலகத் தமிழ் தொலைக்காட்சி"என்று அழைத்துக் கொள்ளும் IBC நிறுவனம், சுவிட்சர்லாந்தில் நடந்த விழாவில் வைத்து, துரைரத்தினம் என்ற சாதிவெறியருக்கு "வாழ்நாள் சாதனையாளர்"விருது வழங்கியது. இது நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே, சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆயினும் அந்த கண்டனங்களை உதாசீனப்படுத்தி விட்டு விருது வழங்கப் பட்டது.

IBC நிறுவனத்திற்கு நெருக்கமான நிராஜ் டேவிட் செய்த சிபாரிசு காரணமாகத் தான் விருது வழங்கப் பட்டதாக தெரிய வருகின்றது. சுவிட்சர்லாந்தில் வாழும் இன்னொரு "ஊடகவியலாளர்"நிராஜ் டேவிட், துரைரத்தினத்தை தனது குருவாக கருதுபவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுபவர்கள்.

இரண்டு "ஊடகவியலாளர்களுக்கும்", அதே நேரம் IBC க்கும் இடையில், சில ஒற்றுமைகள் உள்ளன. இவர்கள் எல்லோரும் தீவிர வலதுசாரிகள். பழமைவாத மரபுகளை பேண விரும்புபவர்கள். இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன அதிசயம்? 

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை முழுவதிலும் சாதிய ஒடுக்குமுறை அதிகமாக இருந்த இடம் யாழ் மாவட்டம் ஆகும். எண்பதுகள் வரையில் அங்காங்கே சாதிக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்படியான காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் மனதில் சாதிய மேலாதிக்க உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்திருக்கும். 

சாதியவாதிகள் ஒரே நேரத்தில் இனவாதிகளாகவும், மதவாதிகளாகவும் இருப்பதைக் காணலாம். அதற்கு இந்த துரைரத்தினமும் விதிவிலக்கு அல்ல. அவரது தினக்கதிர் இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகளிலேயே இனவெறியும், மதவெறியும் அடிக்கடி தலை நீட்டும். 

வழமையாக முஸ்லிம்கள் மீது வெறுப்புக் கொண்ட துரைரத்தினம், சிரிய அகதிகள் பிரச்சினையின் போது கூட தனது துவேஷத்தை காட்டத் தயங்கவில்லை. ஒரு தடவை, லெபனானில் இருந்த சிரியா அகதிகள் சிலரை, கனடா அரசு அகதி விசா கொடுத்து வரவழைத்திருந்தது. அப்போது "சும்மா போன சனியன்களை, கனடா தனது நாட்டுக்குள் வரவழைத்திருக்கிறது"என்று கட்டுரை எழுதினார். இத்தனைக்கும் அவரும் இதே மாதிரியான அகதி விசாவில் சுவிட்சர்லாந்துக்கு சென்றவர் தான். 

ஈழப்போரில் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட, நூற்றுக் கணக்கான தமிழர்கள், முன்னாள் போராளிகள் உட்பட, சுவிட்சர்லாந்து சென்று அகதியாக தஞ்சம் கோரியுள்ளனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களது அகதி மனுவை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்துள்ளது. சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியும் உள்ளது.

அதே நேரத்தில், போராட்டத்தில் எந்தப் பங்களிப்பையும் செய்திராத இரா. துரைரத்தினத்திற்கு அகதி விசா கொடுத்து வரவழைத்துள்ளது. இதை துரைரத்தினத்தின் மொழிநடையில் எழுதினால்: "சும்மா போன சனியனை, சுவிட்சர்லாந்து தனது நாட்டுக்கு வரவழைத்துள்ளது."என்று சொல்லலாம். 

சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சியில் சமாதான செயலகம் இயங்கியது. அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன், நோர்வே நாட்டை சேர்ந்த அனுசரணையாளர்களும் அங்கிருந்தார்கள். 

அந்தக் காலத்தில், இரா. துரைரத்தினம் சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். தூதரக அதிகாரிகள் சமாதான செயலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வன் செய்த சிபாரிசுக்குப் பின்னர் தான் அகதி விசா கொடுத்தார்கள். 

தமிழக தலித் அரசியல் ஆர்வலர் ரவிக்குமாரை, துரைரத்தினம் "பற நாயே"என்று திட்டிய சம்பவம் அப்போதே நடந்திருந்தால், தமிழ்ச்செல்வன் தனது முடிவை மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம். தமிழ்ச்செல்வன் ஒரு தலித் (தாழ்த்தப் பட்ட சாதியினர்) என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிற்காலத்தில் நிகழ்ந்த தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு, உயர்சாதியை சேர்ந்த நடேசன் காரணமாக இருந்தார் என்ற வதந்தியும் வன்னியில் பரவியிருந்தது. அது வேறு கதை. 

"பற நாய்"என்பது பொதுவான வசைச் சொல், அது ஒரு சாதியை குறிப்பதில்லை என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இந்திய சூழலில் அல்லாமல், இலங்கை சூழலில் இதைப் புரிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினை கிளர்ந்தெழுந்த காலத்தில் இருந்து, சிங்கள இனவாதிகள் தமிழர்களை "பறத் தெமளோ"என்று சொல்லித் திட்டுவதுண்டு. அமெரிக்காவில் "Nigger"என்று சொல்வதற்கொப்பான வசைச் சொல்லாக பாவிக்கப் படுகின்றது. 

இலங்கையில், சிங்களவர்களிலும், தமிழர்களிலும் உள்ள ஆதிக்க சாதியினர், தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் "பறை", "சக்கிலி"என்று சொல்லித் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆதிக்க சாதியினர், தமது உறவினர்களுடனான சண்டை சச்சரவுகளில், "பற நாய்"என்று சொல்லித் திட்டுவார்கள். 

யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் மத்தியில், ஒரு சாதிய சொற்றொடர் அடிக்கடி பாவிக்கப் படுகின்றது. "பேப்பரையா பாக்கிறாய்?"என்று கேட்கும் பொழுது, "பேய்ப் பறையா பார்க்கிறாய்"என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் கூறுவார்கள். அதே மாதிரி, "மழை வரும் போல இருக்கு"என்று சொன்னால், "நளவரைப் போல இருக்கு"என்று இரட்டை அர்த்தத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கீழ்த்தரமான நகைச்சுவை, யாழ்ப்பாணத்தாரின் நாசூக்கான சாதிய மனோபாவத்திற்கு ஓர் உதாரணம். 

ஆகையினால், பேஸ்புக் விவாதம் ஒன்றில், ரவிக்குமாருடன் வாக்குவாதப் பட்ட துரைரத்தினம், "பற நாயே"என்று அர்த்தம் தெரியாமல் பேசி விட்டார் என்று கூற முடியாது. பொதுவாக மற்றவர்கள் நாலு சுவருக்குள் பேசும் வார்த்தையை, துரைரத்தினம் பொதுவெளியில் பேசி விட்டார் என்பது மட்டும் தான் வித்தியாசம். நுணலும் தன் வாயால் கெடும். 

இந்த இடத்தில் தமிழ் தேசியவாதிகளிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. "ஈழப் போராட்டம் காரணமாக சாதியம் முற்றாக அழிந்து விட்டது"என்று இனிமேலும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? சாதியத்தை ஒழிப்பதற்கான தமிழ் தேசிய அரசியல் திட்டத்தை, தமிழ் மக்கள் முன்வைப்பீர்களா? 

அன்பான தமிழ் தேசியவாதிகளே! குறைந்த பட்சம், தமிழ்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உள்ள, சாதிவெறியர்களையாவது உங்களால் திருத்த முடியவில்லையா? நீங்கள் எவ்வாறு ஈழத் தமிழ் சமூகத்தில் உள்ள சாதியவாதத்தை  ஒழிக்கப் போகிறீர்கள்? சாதிவெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்?  "இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?"என்றும் சிலர் உங்களைப் பார்த்துக் கேட்கலாம். 

அதாவது, புலிகளின் பாணியில், சாதிவெறியர்களை சமூகவிரோதிகளாக குற்றஞ்சாட்டி, அவர்களை சமூகத்தில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடலாம். புலிகளின் மீது கண்மூடித்தனமான விசுவாசம் காட்டும் தமிழ் தேசியவாதிகள், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்? உங்களால் தேசியத் தலைவராக புகழப்படும் பிரபாகரன் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக இருந்தார். எதிரிகளும் ஏற்றுக் கொள்ளும் உண்மை இது. 

தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களில் பலர் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உலக நாடுகளில் புலிகளின் பிரதிநிதியாக வலம் வந்த தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்த மரியாதை, சாதிய சமூகத்தில் நடந்த மாபெரும் புரட்சி ஆகும். இன்றைக்கு மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற பிரதிநித்துவத்தை கூட கொடுக்க மறுத்து வருகின்றது. ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்"விருது!
கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது
காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!
சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம"ஆதிக்கம்

"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!

$
0
0

"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!"என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை"கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?

முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
 //எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்"தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம்.கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.

//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?// 

இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை. 

விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.

மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.

எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை"மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

ம‌ஞ்ச‌ள் க‌ண்னாடி அணிந்தால் காண்ப‌தெல்லாம் ம‌ஞ்ச‌ளாக‌ தெரியும். இன‌வாத‌ க‌ண்ணாடி அணிந்த‌வ‌ர்க‌ள் நிலையும் அது தான். இந்தியாவில் அர‌சு இய‌ந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.

ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக  நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"

மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?

இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:

//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//

ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்?மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள். 

//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//

தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்"என்ற வெற்றுக் கூச்சல்?

//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//

அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்"இலட்சணம்!

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது. 

முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."


திராவிட‌க்க‌ட்சிக‌ள் கால‌த்தில் தான் மொழிவாரி மாநில‌ம் உருவான‌து. அப்போது திமுக‌ முன்வைத்த‌ நியாயம் பார்ப்ப‌னீய‌த்திற்கு எதிரான‌ தார்மீக‌ கோப‌ம்தான். அப்போது வ‌ட‌ இந்திய‌ர்க‌ளை குறை கூறினார்க‌ள். வ‌ட‌க்கு வாழ்கிற‌து தெற்கு தேய்கிற‌து. த‌னித் த‌மிழ் நாடு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு என்றார்க‌ள்.ம‌த்திய‌ அர‌சு த‌மிழ் நாடு மாநில‌ ச‌ட்ட‌ ச‌பைக்கு கூடுத‌ல் அதிகார‌ம் கொடுத்து, த‌மிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்த‌து.

த‌மிழ‌ர்க‌ள் ஆளும் த‌மிழ் நாட்டில் எல்லாம் சிற‌ப்பாக‌ இல்லை. உண்மையில் இது ஒரு வ‌கையில் த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌லின் வ‌ங்குறோத்துத‌ன‌ம். அந்த‌ உண்மையை ம‌றைக்கும் சீமானும், அவ‌ர‌து துதிபாடிக‌ளும் இப்போது புதிய‌தொரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப‌ணு சோத‌னை ந‌ட‌த்தி எவ‌ன் அச‌ல் த‌மிழ‌ன், எவ‌ன் போலித் த‌மிழ‌ன் என்று ஆராய்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சியின்(?) முடிவு: "த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள், ஆள்ப‌வ‌ர்க‌ள் போலித் த‌மிழ‌ர்க‌ள். அச‌ல் த‌மிழ‌ர்க‌ள் ஆட்சி செய்தால் எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லை. த‌மிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக‌ ஓடும்..."என்று குடுகுடுப்பைக் கார‌ன் மாதிரி ஜோஸ்ய‌ம் சொல்கிறார்க‌ள். ஐம்ப‌துக‌ளில் திமுக‌ அர‌ங்கேற்றிய‌ அதே நாட‌க‌ம் தான்.

ஆனால், ஒரு வித்தியாச‌ம் உள்ள‌து. திமுக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தினால் ம‌த்திய‌ அர‌சின் அதிகார‌ம், ஹிந்தி பேரின‌வாத‌ மேலாதிக்க‌ம் க‌ணிச‌மான‌ அள‌வில் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. நாம் த‌மிழ‌ர் முன்வைக்கும் கோரிக்கைக‌ள் அதிகார‌ப் ப‌ர‌வலாக்க‌ல் ப‌ற்றிய‌து அல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில், திமுக‌ த‌மிழ் தேசிய‌ இய‌க்க‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ப‌ங்க‌ளிப்புக்கு எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ வ‌கையில் சீமானின் கோரிக்கைக‌ள் அமைந்துள்ள‌ன‌.

தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்"கட்சி

$
0
0

பகுதி - 1

 "சிங்கள சீமான்"ராஜபக்சேயும், 
"தமிழ் ராஜபக்சே"சீமானும்


சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொண்டு வந்து கொடுத்தார்களா? புலிகளுக்காக எங்காவது வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா? 

தமது வாழ்க்கையில் இது போன்ற எதையுமே செய்யாதிராத போலிப் புலி ஆதரவாளர்கள் தான் இந்த நாம் தமிழர் கட்சியினர். ஆனால், அவ்வாறான அர்ப்பணிப்புகளை செய்தவர்களுக்கு எதிராகவே அவர்களது அரசியல் அமைந்துள்ளது. நாம் (போலித்) தமிழர் கட்சியினர், உண்மையிலேயே புலிகளுக்காக பாடுபட்டவர்களையும், ஈழப்போராட்டத்தில் பங்களித்தவர்களையும் அவமதிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈழப்போர் நடந்த முப்பதாண்டு காலத்தில், சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், ஈழத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 2009 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில், திடீரென முளைத்த நாம் (போலித்) தமிழர்கள், புலிகளின் அழிவை மூலதனமாக்கி அரசியல் செய்தனர். உண்மையாகவே புலிகளுக்கு உதவியவர்கள் மீது அவதூறு செய்வதும், வசை பாடுவதும், அவர்களது அன்றாட அரசியலாக உள்ளது. பார்ப்பன அடிவருடிக் கும்பலான சீமானும், நாம் (போலித்) தமிழர் கட்சியும், ஈழப் போராட்டத்திற்கு செய்த துரோகமும், ஏற்படுத்திய பின்னடைவுகளும் மிக மிக அதிகமாகும்.

இனிமேல் ஒரு ஈழப் போராட்டம் வர விடாமல் தடுப்பதும், தமிழ்நாட்டில் பொதுவாக உள்ள தமிழ் தேசிய உணர்வை இனவாதமாக குறுக்கி சிதைப்பதும், நாம் (போலித்) தமிழர் கட்சியின் குறிக்கோளாக உள்ளது. இந்த நுண்ணரசியலை, சீமானின் பேச்சுக்களில் இருந்தும், அவரது ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களில் இருந்தும் புரிந்து கொள்ளலாம்.

நாம் (போலித்) தமிழர் கட்சிக்கென நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாது. அது காலத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாறுபடும். சீமானின் வாயில் இருந்து என்ன வந்தாலும் அது கொள்கை தான். சீமான் யாரையாவது "ங்கோத்தா"என்று திட்டினாலும், "லூசாடா நீ"என்று ஏசினாலும், அதை நியாயப் படுத்தி வாதிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 

சீமான் தனது முப்பாட்டன் முருகன் என்று வேல் தூக்கி ஆடினாலும் அதுவே ஒரு கொள்கையாகி விடும். உலகில் உள்ள தீவிர வலதுசாரி பாசிசக் கட்சிகளுக்கே உரிய பொதுவான குணாம்சம் அது. தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. 

சிங்கள இனவாதத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் முப்பாட்டனும் முருகன் தான்! துட்டகைமுனு கதிர்காமக் கந்தனை வழிபட்டு விட்டு, எல்லாளனுடன் போருக்கு சென்றதாக மகாவம்சம் கூறுகின்றது. அதையே "நவீன துட்டகைமுனு"ராஜபக்சேவும் பின்பற்றுள்ளார். 

"ஈழத்தில் சிங்களவர்கள் எனது இனத்தை அழிக்கிறார்கள்..."என்று அனைத்து சிங்களவர்களையும் தமிழர்களின் எதிரிகளாக காட்டி அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். சிங்கள மாணவர்களை படிக்க விடாமல் விரட்டினார்கள்.

இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக, இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசு சீமானுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை பற்றி எதுவும் தெரியாதவர்கள் மட்டும் தான், நாம் (போலித்) தமிழர் கட்சியினரின் செயல்களை நியாயப் படுத்துவார்கள்.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்கியதில், சிங்கள இனவாதிகள் காட்டிய வெறித்தனம் மறுக்க முடியாத உண்மை. உலகில் எந்தவொரு இனவாதியும், தான் இனவாதி தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக எதிரி இனத்தவர்கள் தான் இனவாதிகள் என்று சொல்லிக் கொள்வார்கள். சிங்கள இனவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே கூட, "இனவாதம் பேசாதீர்கள்"என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து வந்தார். ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் ஒரு தடவை கூட, சிங்கள இனவாதக் கட்சிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

ஒரு ஜனாதிபதிக்கே சிங்களவர்களும் இனவாதம் பேசுவார்கள் என்ற புரிந்துணர்வு இல்லை. இந்த இலட்சணத்தில் சாதாரண சிங்களவர்கள், தாங்கள் இனவாதம் பேசுவதாக ஒத்துக் கொள்வார்களா? அதெல்லாம் "இனப் பற்று"என்று தான் விளக்கம் சொல்வார்கள். அவ்வாறு தான் நாம் தமிழர் ஆதரவாளர்களும் நடந்து கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்? சிறிலங்காவில் "ராஜபக்சே ஒரு சிங்கள சீமான்". தமிழ்நாட்டில் "சீமான் ஒரு தமிழ் ராஜபக்சே"என்பது மட்டும் தான் வித்தியாசம்.

மொழி ஒரு தடையாக இருப்பதால், மற்ற இனத்தவர்களின் எண்ணம் பற்றி எதுவும் தெரிவதில்லை. தமிழர்களைப் பற்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள், இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, சிறுபான்மையினரான சிங்கள இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில், இந்தியர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சாதாரணமான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த எண்ணம் பெருமளவு மாறி விட்டது. இருப்பினும், "தமிழர்கள் சிங்கள இனத்தை அழிக்கக் கிளம்பியுள்ளனர்..."என்ற கருத்து மட்டும் மாறவில்லை.

ஈழப்போர் காலத்தில், எல்லைப்புற சிங்கள கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை கொன்ற புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள், அவர்களது தப்பெண்ணத்தை சரியென வாதிட வைத்தன. சிங்கள பொதுமக்கள் கொல்லப் படும் ஒவ்வொரு தாக்குதலும், தென்னிலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் தமிழர் விரோத பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. அதே மாதிரி, தமிழ்நாட்டில் சிங்கள சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் சிங்கள இனவாதிகளுக்கு நன்மையாக முடிந்துள்ளது.

நாம் போலித் தமிழர் கட்சி சித்தரிப்பது போல, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்களா"? சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழர்கள் எல்லோரையும் கெட்டவர்களாக சித்தரித்துக் காட்டுகின்றன. அதையே தான் தமிழ் இனவாதக் கட்சியான நாம் தமிழரும் செய்கின்றது. இனவாதிகள் பேசும் மொழிகள் மட்டுமே வேறு வேறு. கொள்கை, குறிக்கோள் ஒன்று தான். தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ, மக்கள் எல்லோரும் இனவாதிகள் அல்லர். இனவாதிகள் தம்மைப் போலவே, தம்மின மக்கள் அனைவரும் சிந்திப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். நாம் தமிழர் மட்டுமல்ல, நாம் சிங்களவரும் அப்படித் தான் கருதிக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்:
"சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொடுத்தார்களா? புலிகளுக்காக வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா?"

ஈழப்போரின் இறுதிக் காலத்தில், ஜேவிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர், அதாவது இடதுசாரி சிங்களவர்கள், புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு புலிகள் வன்னியில் வைத்து இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். குறிப்பாக வெடி குண்டு வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், தென்னிலங்கையில் தலைமறைவாக இயங்கினார்கள். இறுதிப் போர் நடந்த காலத்தில், கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் அவர்களினால் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

இருப்பினும், புலனாய்வுத்துறை எப்படியோ துப்புத் துலக்கி சூத்திரதாரிகளை பிடித்து விட்டது. அரசு அவர்களுக்கு "சிங்களப் புலிகள்"என்று பட்டம் சூட்டியது. புலிகளுக்காக குண்டு வைத்த சிங்களவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்கள் கூட கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, கைது செய்யப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அயலவர்களின் ஏளனப் பேச்சுகள், பழிச் சொற்களை தாங்க முடியாமல், குடியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களப் புலிகளின்"குடும்பங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப் பட்டனர். இந்த நிலைமை சீமானுக்கோ, அல்லது நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கோ ஏற்பட்டிருக்கிறதா?  

ஈழப்போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான ஆவணங்களை வெளியிட்டவர்கள் யார்? சீமானா? அல்லது யாராவதொரு நாம் தமிழர் ஆதரவாளரா? இல்லவே இல்லை. புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்கள் தான், சனல் 4 தொலைக்காட்சிக்கு அந்த வீடியோவை அனுப்பினார்கள். 

"இலங்கையின் கொலைக்களம்"என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் பேட்டி கொடுக்கும் சிங்களவரான பாசனா யார் தெரியுமா? இலங்கையில் சிங்களப் புலி குற்றம் சாட்டப் பட்டு தேடப் படுபவர்களில் முதன்மையானவர். அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு, சில தமிழ் புலி ஆதரவாளர்கள் உதவி செய்துள்ளனர். 

இதை விட, எண்பதுகளில் சட்டர்டே ரிவியூ பத்திரிகையில் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதி வந்த காமினி நவரட்ன என்ற சிங்களவர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணம் சென்று, யாழ் பொறுப்பாளர் கிட்டுவை சந்தித்து பேசி, கைதிகள் பரிமாற்றத்திற்கு உதவிய விஜய குமாரணதுங்க என்ற சிங்களவர். இறுதி வரையில் புலிகளையும், தமிழீழத்தையும் ஆதரித்து பேசி வந்த விக்கிரமபாகு கருணாரட்ன என்ற சிங்களவர். இப்படிப் பல சிங்களவர்கள் ஈழப் போராட்டத்திற்கு தம்மாலியன்ற பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர்.

புலிகளுக்கு ஆதரவான சிங்களவர்கள் செய்த தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, "செந்தமிழன்"சீமான், அல்லது நாம் "தமிழர்"கட்சியினர், ஈழப் போராட்டத்திற்கு செய்திருக்கிறார்களா? சொன்னால் வெட்கக் கேடு. ஒன்றுமேயில்லை. 

ஈழப் போராட்டத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர்கள், சிங்களத் தோழர்கள் செய்த பங்களிப்பை அவமதிக்கும் வகையில், சிங்கள இன வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? சிங்கள, ஹிந்திய ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள் தான், சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் என்பதில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

(தொடரும்)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!
நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Viewing all 556 articles
Browse latest View live


Latest Images